AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெளியான தவெகவின் உத்தேச அமைச்சர் பட்டியல் – விஜய்க்கு என்னென்ன துறை?

தவெக தலைவர் விஜய் முதல்வராக மே 10, 2026 நாளை பதவியேற்கவிருக்கும் நிலையில், அவருடன் மேலும் 9 அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அவர்களின் பட்டியல் தற்போது சமூக வலைதளங்களில் வரைலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெளியான தவெகவின் உத்தேச அமைச்சர் பட்டியல் –  விஜய்க்கு என்னென்ன துறை?
ஆதவ் அர்ஜுனாவுடன் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 09 May 2026 22:33 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த மே 4, 2026 அன்று வெளியான நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில் அதிக தொகுதிகளில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க உரிமை கோரியது. இந்த நிலையில் போதிய ஆதரவு இல்லை என கூறி தவெகவின் கோரிக்கையை ஆளுநர் தொடர்ந்து நிராகரித்தார். இதற்கு இடையில் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்கவிருப்பதாக தகவல்கள் பரவ தமிழக அரசியல் பரபரப்பாகியது.இந்த நிலையில் இந்த பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தவெகவிற்கு விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய முஸ்லீம் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைத்தது.

இந்த நிலையில் ஆளுநரை தனது ஆதரவு கட்சி தலைவர்களுடன் சந்தித்த விஜய், ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து அவரது கோரிக்கையை ஏற்ற ஆளுநர் விஜய்யை ஆட்சியமைக்க அழைத்தார். மேலும் அவரை முதல்வராகவும் அறிவித்தார். இதனையடுத்து விஜய்யின் பதவியேற்பு விழா மே 10, 2026 காலை 10 மணிக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கிறது. அவருடன் மேலும் 9 அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : ஸ்டாலினிடம் தெரிவித்துவிட்டு தான் தவெகவுக்கு ஆதரவு – திருமாவளவன் பகிர்ந்த தகவல்

மக்கள் மாளிகை வெளியிட்ட அறிக்கை

 

தவெகவின் உத்தேச அமைச்சர்கள் பட்டியல்

இந்த நிலையில் 9 அமைச்சர்களின் உத்தேச பட்டியல் தற்போது வைரலாகி வருகிறது.

  • பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை – ஜோசப் விஜய்
  • பொதுப்பணித்துறை – கே.ஏ.செங்கோட்டையன்
  • நகராட்சி நிர்வாகத்துறை – என்.ஆனந்த்
  • பள்ளி கல்வித்துறை – வெங்கட் ரமணன்
  • மின்சாரத்துறை – சி.டி.ஆர். நிர்மல்குமார்
  • விளையாட்டு மற்றும் மது விலக்குத்துறை – ஆதவ் அர்ஜுனா
  • ஆதி திராவிடர் நலத்துறை – ராஜ்மோகன்
  • சிறுபான்மை நலத்துறை – முஸ்தபா
  • பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை – அருண்ராஜ்

என இந்த பட்டியலில் உள்ளவர்கள் பதவியேற்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து தவெகவில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையும் படிக்க : ஆதரவு தவெகவுக்கு… இருப்பது திமுக கூட்டணி – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

இந்த நிலையில் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு ஆளுநர் 3 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார். இதனையடுத்து வருகிற மே 13, 2026 அன்றுக்குள் விஜய் தனது பெரும்பான்மயை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். ஏற்கனவே விசிக, இந்திய முஸ்லீம் லிக், கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் ஆகியை தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ள நிலையில் பெரும்பான்மயை நிரூபிப்பதில் தவெகவிற்கு எந்த சிக்கலும் இல்லை என கூறப்படுகிறது.

Follow Us