AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெரும்பான்மையை நிரூபிக்க 3 நாள் அவகாசம் – தவெகவிற்கு ஆளுநர் கெடு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அர்லேகர் 3 நாள் அவகாசம் அளித்தார்.  அதன்படி மே 13, 2026 தேதிக்குள் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

பெரும்பான்மையை நிரூபிக்க 3 நாள் அவகாசம் – தவெகவிற்கு ஆளுநர் கெடு
தவெக நிர்வாகிகளுடன் ஆளுநரை சந்தித்த விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 09 May 2026 21:57 PM IST

சென்னை, மே 9 : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அர்லேகர் 3 நாள் அவகாசம் அளித்தார்.  அதன்படி மே 13, 2026 தேதிக்குள் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.  தவெக தலைவர் விஜய்க்கு ஆட்சியமைப்பதற்கு தேவையான எம்எல்ஏகளின் ஆதரவு கிடைத்துள்ளது. இதனையடுத்து தமிழக ஆளுநரை தனது ஆதரவு கட்சி தலைவர்களுடன் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதனையடுத்து தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அறிவித்தார். மேலும் அவரை தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்க அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் தவெக விஜய்யின் பதவியேற்பு மே 10, 2026 நாளை நடைபெறவிருக்கிறது. விஜய்யுடன் மேலும் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்கவுள்ளதாகவும் அதற்கான பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : ஸ்டாலினிடம் தெரிவித்துவிட்டு தான் தவெகவுக்கு ஆதரவு – திருமாவளவன் பகிர்ந்த தகவல்

இந்த நிலையில் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிக்க 3 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வருகிற மே 13, 2026 தேதிக்குள் சட்டமன்றத்தில் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி, கங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு வழங்கியுள்ள நிலையில் விஜய் பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல் இருக்காது என கூறப்படுகிறது.

ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கை

 

இதனையடுத்து கடந்த மே 4, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் நிலவி வந்த பரபரப்பு முடிவுக்கு வருகிறது. விஜய்யுடன் மேலும் 9 அமைச்சர்களும் பதவியேற்கவிருக்கின்றனர்.  தமிழக சட்டமன்றத்துக்கு தேர்வான எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வரும் மே 11, 2026 திங்கள் கிழமை பதவியேற்கின்றனர். புதிய எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு செய்து வைக்க உள்ளார்.

இதையும் படிக்க : ஆதரவு தவெகவுக்கு… இருப்பது திமுக கூட்டணி – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை திமுக கூட்டணியில் தொடர்வதாகவும், தவெகவிற்கு வெளியில் இருந்து தவெக ஆட்சியமைக்க ஆதரவு என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் வருங்காலங்களில் தவெக அரசுக்கு சிக்கல் ஏற்படுமா என்ற கவலையும் அக்கட்சியினரிடையே இருப்பதாக தெரிகிறது.

Follow Us