AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிறந்தநாளில் உலக சாதனை: சச்சினின் சாதனையை முறியடித்த கிரிக்கெட் வீரர்

Atal Surpasses Sachin’s Record : பிறந்தநாளில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர் செதிகுல்லா அடல் வெறும் 120 பந்துகளில் 143 ரன்கள் குவித்தார். இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பிறந்தநாளில் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச தனிநபர் ரன்களுக்கான உலக சாதனையை அவர் தன்வசப்படுத்தினார்.

பிறந்தநாளில் உலக சாதனை: சச்சினின் சாதனையை முறியடித்த கிரிக்கெட் வீரர்
சச்சின் டெண்டுல்கர் - செதிகுல்லா அடல்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Aug 2026 19:57 PM IST

சர்வதேச கிரிக்கெட்டில் தனது 25வது பிறந்தநாளில், கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் வசம் இருந்த உலக சாதனையை முறியடித்து, செதிகுல்லா அடல் ஒரு அரிய சாதனையைப் படைத்துள்ளார். இந்தச் செயல் உலகளாவிய கவனத்தை அவர் பக்கம் ஈர்த்துள்ளது. பெல்ஃபாஸ்டில் அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் அடல் அபாரமாக விளையாடினார்.

சச்சினின் சாதனையை முறியடித்த கிரிக்கெட் வீரர்

தனது பிறந்தநாளில் களமிறங்கிய அவர், வெறும் 120 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உட்பட 143 ரன்கள் குவித்தார். இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பிறந்தநாளில் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச தனிநபர் ரன்களுக்கான உலக சாதனையை அவர் தன்வசப்படுத்தினார். 2022 ஆம் ஆண்டில் தனது 30வது பிறந்தநாளில் நெதர்லாந்துக்கு எதிராக நியூசிலாந்தின் டாம் லாதம் எடுத்த 140 ரன்கள் என்ற முந்தைய சாதனையை அடல் முறியடித்தார். சச்சின் மற்றும் விராட் கோலியின் சாதனைகளை முறியடித்தார்.

இதையும் படிக்க : IND vs SL: இலங்கை தொடர் கடைசியா? பரவும் ஜடேஜாவின் டெஸ்ட் ஓய்வு குறித்த வதந்திகள்!

இந்த இன்னிங்ஸ் மூலம், ‘கிரிக்கெட் கடவுள்’ என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையைக்கூட அடல் முறியடித்தார். 1998 ஆம் ஆண்டில் தனது 25-வது பிறந்தநாளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் 134 ரன்கள் எடுத்திருந்தார். அந்தச் சாதனை இப்போது மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

பிறந்தநாளில் ஒருநாள் போட்டியில் முதல் சதமடித்த பெருமை இந்தியாவின் வினோத் காம்ப்ளியிடம் இருந்தார். கடந்த 1993 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்திருந்தார். மேலும் விராட் கோலியும் 2023 ஆம் ஆண்டில் தனது 35வது பிறந்தநாளில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்திருந்தார். இவர்கள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி அடல் முதலிடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில், சக தொடக்க ஆட்டக்காரரான இப்ராகிம் சத்ரானுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 231 ரன்கள் குவித்து புதிய சாதனையை படைத்தார். குறிப்பாக, ஆப்கானிஸ்தானின் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2வது விக்கெட்டுக்கு மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் இதுவாகும்.

இதையும் படிக்க : IND vs SL: 2017ல் காலியில் இலங்கையை காலி செய்த வரலாறு.. இந்திய அணி படைத்த சரித்திரம் இதுதான்!

மேலும் இந்தப் போட்டியில் 107 ரன்கள் குவித்துச் சிறப்பாக ஆடிய ஜத்ரான், ஒருநாள் போட்டிகளில் 2,000 ரன்களைக் கடந்த மூன்றாவது அதிவேக ஆசிய பேட்ஸ்மேன் என்ற சிறப்பையும் பெற்றார்.. மேலும் அவரது அதிரடியான பேட்டிங் காரணமாக, ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 343 ரன்களைக் குவித்தது. வெற்றி இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து அணி 48 ஓவர்களில் 301 ரன்களுக்கு ஆட்டமிழந்தது; இதனால் ஆப்கானிஸ்தான் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Follow Us