IND vs SL: இலங்கை தொடர் கடைசியா? பரவும் ஜடேஜாவின் டெஸ்ட் ஓய்வு குறித்த வதந்திகள்!
Ravindra Jadeja Retirement Rumors: ரவீந்திர ஜடேஜாவின் வயது அதிகரிப்பதாலும், இந்திய அணி நிர்வாகம் இளம் வீரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாலும் இந்த வதந்திகள் பரவத் தொடங்கின. ஒரு ஆல்-ரவுண்டராக, ஜடேஜா அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் இந்திய அணிக்கு மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னணி ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் (Ravindra Jadeja) எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து விளையாட்டு வட்டாரங்களில் சூடான விவாதம் தொடங்கியுள்ளது. இலங்கைக்கு எதிரான வரவிருக்கும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்குப் பிறகு, ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற வாய்ப்புள்ளது என்று வதந்திகள் பரவி வருகின்றன. 2009-ல் இந்திய அணியில் (Indian Cricket Team) காலடி எடுத்து வைத்த ஜடேஜா, ஏற்கனவே டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது ஜடேஜா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இருப்பினும், இலங்கை தொடருக்குப் பிறகு ஓய்வு பெறுவார் என்று ஜடேஜாவிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த உறுதிப்படுத்தலும் வரவில்லை.
ALSO READ: காயத்தின் சுழலில் சிக்கிய சுழற்பந்து ஆல்ரவுண்டர்.. ஆளில்லாமல் தவிக்கும் இந்திய அணி!




வயது முதிர்வு, இளம் அணி மாற்றம்..
🚨 DO YOU KNOW 🚨
– Among the current India test squad, only 3 players namely Ravindra Jadeja, KL Rahul and Kuldeep Yadav have previously played tests in Sri Lanka. Others will be playing their first test in Sri Lankan soil.
Sri Lanka vs India First Test starts 15th August. 🔥… pic.twitter.com/X8K3CNOPVb
— Cricholic Mrigankaaaa🇮🇳❤️ (@MSDianMrigu) August 11, 2026
ரவீந்திர ஜடேஜாவின் வயது அதிகரிப்பதாலும், இந்திய அணி நிர்வாகம் இளம் வீரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாலும் இந்த வதந்திகள் பரவத் தொடங்கின. ஒரு ஆல்-ரவுண்டராக, ஜடேஜா அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் இந்திய அணிக்கு மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக, சுழற்பந்துக்குச் சாதகமான பிட்சுகளை கொண்ட இலங்கை சுற்றுப்பயணத்தில், கீழ்வரிசையில் பேட்டிங் ஆதரவு அளிப்பதிலும், இடது கை சுழற்பந்து வீசுவதிலும் ஜடேஜாவின் பங்கு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.
இளம் கேப்டன் கில்லுக்கான வழிகாட்டுதல்…
தொடரின் முடிவையே மாற்றும் திறன் கொண்ட ரவீந்திர ஜடேஜாவின் இருப்பு, இலங்கைத் தொடரில் ஒரு முக்கியப் பங்காற்றும். மேலும், இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான அணிக்கு ஜடேஜாவின் அனுபவம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பந்துவீச்சில் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தி ரன்கள் குவிக்கக்கூடிய ரவீந்திர ஜடேஜா போன்ற ஒரு வீரருக்குப் பதிலாக ஒருவரை நியமிப்பது, இந்திய அணி நிர்வாகத்திற்கு மிகவும் கடினமான ஒரு பணியாகும்.
ALSO READ: நிசான்கா விலகல்! யார் கேப்டன்? இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்க்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஓய்வு பெறுவாரா ஜடேஜா..?
2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஜடேஜா டெஸ்ட் போட்டிகளுக்கு விடைபெற்றால், அது இந்திய கிரிக்கெட்டில் சிறந்த ஆல்-ரவுண்டர்களின் ஒரு சகாப்தத்தின் முடிவாக இருக்கும். ஆனால், ஜடேஜாவே அதை அறிவிக்கும் வரை இந்தச் செய்தி வெறும் யூகமே என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நம்புகின்றனர்.