AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Padma Awards: குடியரசு தலைவர் கைகளால் பத்மஸ்ரீ.. கௌரவம் பெற்ற ஹர்மன்பிரீத் கவுர்!

Harmanpreet Kaur: கடந்த 2025ம் ஆண்டு, இந்திய மகளிர் அணிக்கு முதல் முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்று தந்த முதல் கேப்டன் என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுர் பெற்று வரலாறு படைத்தார். இவரது சிறப்பான விளையாட்டு வாழ்க்கை, சாதனைகள் மற்றும் கேப்டன்ஷிக்காக கவுருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

Padma Awards: குடியரசு தலைவர் கைகளால் பத்மஸ்ரீ.. கௌரவம் பெற்ற ஹர்மன்பிரீத் கவுர்!
ஹர்மன்பிரீத் கவுர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 May 2026 19:41 PM IST

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு (President Droupadi Murmu), இன்று அதாவது 2026 மே 25ம் தேதி இந்திய மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (Harmanpreet Kaur) மற்றும் பாராலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற உயரம் தாண்டுதல் வீரர் பிரவீன் குமார் ஆகியோருக்கு இந்தியாவின் 4வது உயரிய குடியரசு விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தார். கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதம், குடியரசுத் தலைவர் பத்ம விருதுகளை அறிவித்தார். இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உட்பட 9 முக்கிய விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ: ஒருநாள் கிரிக்கெட்டில் முக்கிய விதியை மாற்றும் ஐசிசி.. பலன் பெறும் சர்வதேச அணிகள்!

கடந்த 2025ம் ஆண்டு, இந்திய மகளிர் அணிக்கு முதல் முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்று தந்த முதல் கேப்டன் என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுர் பெற்று வரலாறு படைத்தார். இவரது சிறப்பான விளையாட்டு வாழ்க்கை, சாதனைகள் மற்றும் கேப்டன்ஷிக்காக கவுருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஹர்மன்பிரீத் கவுர் பெயர் அறிவிக்கப்பட்டபோது, ​​மும்பை இந்தியன்ஸ் பகிர்ந்த ஒரு வீடியோவில் ஹர்மன்பிரீத் கவுர், தனது தந்தைக்கு ராஷ்டிரபதி பவனிலிருந்து தொலைபேசி மூலம் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார். தனக்கு முன்பே தனது பெற்றோர் இந்த விஷயத்தைத் தெரிந்துகொண்டதில் ஹர்மன்பிரீத் கவுர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், இது தனக்கும் ஒரு அற்புதமான தருணம் என்று கூறி ரோஹித் ஷர்மாவுக்கும் ஹர்மன்பிரீத் கவுர் வாழ்த்து தெரிவித்தார்.

ஹர்மன்பிரீத் கவுர் கிரிக்கெட் வாழ்க்கை:


பஞ்சாபைச் சேர்ந்த ஹர்மன்பிரீத் கவுர், இந்தியாவுக்காக 7 டெஸ்ட், 164 ஒருநாள் மற்றும் 195 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, முறையே 230, 4541 மற்றும் 3991 ரன்களை எடுத்துள்ளார்.

பத்ம விருது வென்ற வீரர்கள்:

  • பத்மஸ்ரீ – பல்தேவ் சிங்
  • பத்மஸ்ரீ – ஹர்மன்ப்ரீத் கவுர்
  • பத்மஸ்ரீ – பகவான்தாஸ் ராய்க்வார்
  • பத்மஸ்ரீ – கே. பாஞ்சனிவேல்
  • பத்மஸ்ரீ – ரோஹித் ஷர்மா
  • பத்மஸ்ரீ – சவிதா புனியா
  • பத்மஸ்ரீ – பிரவீன் குமார்
  • பத்மஸ்ரீ – விளாடிமிர் மெஸ்ட்விரிஷ்விலி (மரணத்திற்குப் பின்)
  • பத்ம பூஷன் – விஜய் அமிர்தராஜ்

ALSO READ: விரைவில் முடியும் ஐபிஎல்.. அடுத்த 6 நாட்களில் சர்வதேச போட்டி.. இந்திய அணியின் அட்டவணை இதோ!

பாரா உயரம் தாண்டுதல் வீரர் பிரவீன் குமார், உத்தரப் பிரதேசத்தின் கோவிந்த்கரைச் சேர்ந்தவர். இவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் மோதிலால் நேரு கல்லூரியில் பயின்றார். பிரவீன் குமார், 2024 பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதல் (T64) பிரிவில் தங்கப் பதக்கத்தையும், 2020 டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். கடந்த 2025ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தையும், 2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் (ஹாங்சோ) தங்கப் பதக்கத்தையும் பிரவீன் குமார் வென்றார்.

 

Follow Us