AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs AFG ODI Series: ரோஹித், கோலிக்கு இடம்.. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!

India Squad For AFG ODI: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரோஹித் சர்மா விளையாடுவது அவர்களின் உடற்தகுதியைப் பொறுத்தே விளையாடுவார்களா என்பது தெரியவரும். வருகின்ற 2027ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், இந்த 2 அனுபவ வீரர்களும் உடற்தகுதி பெறுவது மிக முக்கியமானது.

IND vs AFG ODI Series: ரோஹித், கோலிக்கு இடம்.. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!
ரோஹித் சர்மா - விராட் கோலி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 May 2026 18:56 PM IST

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) என்று அழைக்கப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை இன்று அதாவது 2026 மே 19ம் தேதி அறிவித்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், ஷ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கு பிறகு, இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வருகின்ற 2026 ஜூன் 14 முதல் 2026 ஜூன் 20 வரை நடைபெறுகிறது.

ALSO READ: இந்திய அணிக்கு எதிராக 2 டெஸ்ட்.. விரைவில் அட்டவணை! காத்திருக்கும் இலங்கை..!

3 இளம் வீரர்களுக்கு வாய்ப்பு:

ஐபிஎல் 2026 சீசனில் லக்னோ சூப்பர்  ஜெயண்ட்ஸ் அணிக்காக சிறப்பாக பந்துவீசி வரும் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ்,  இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் குர்னூர் பிரார் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹர்ஷ் துபே ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரோஹித் சர்மா விளையாடுவது அவர்களின் உடற்தகுதியைப் பொறுத்தே விளையாடுவார்களா என்பது தெரியவரும். வருகின்ற 2027ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், இந்த 2 அனுபவ வீரர்களும் உடற்தகுதி பெறுவது மிக முக்கியமானது.

முக்கிய வீரர்களுக்கு ஓய்வு:

நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா,  முகமது சிராஜ் மற்றும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. இந்தத் தொடர் ஐபிஎல் தொடருக்குப் பிறகு நடைபெறுவதால், இந்த அனுபவ வீரர்களுக்கு அவர்களது உடற்திறனை கருத்தில் கொண்டு ஓய்வளிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இருப்பினும், இந்த வீரர்கள் குறித்து பிசிசிஐ எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி


சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி , ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் துபே, ஹர்ஷ் பிரர்.

ALSO READ: ஆப்கானிஸ்தான் எதிரான ஒரே ஒரு டெஸ்ட்.. இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ!

ஒருநாள் தொடர் அட்டவணை

ஒருநாள் தொடரின் முதல் போட்டி வருகின்ற 2026 ஜூன் 14 அன்று தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும். இரண்டாவது ஒருநாள் போட்டி வருகின்ற 2026 ஜூன் 17 அன்று லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும். மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி வருகின்ற 2026 ஜூன் 20 அன்று சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும்.வருகின்ற 2026 ஜூன் 6 முதல் தொடங்கும் ஒருநாள் தொடருக்கு முன்பு, இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us