AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs AFG Test: ஆப்கானிஸ்தான் எதிரான ஒரே ஒரு டெஸ்ட்.. இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ!

India Test Squad For Afghanistan Series: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் இருந்து ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளன. இந்த டெஸ்ட் போட்டியானது வருகின்ற 2026 ஜூன் 6 முதல் 10 வரை நியூ சண்டிகரில் நடைபெறும்.

IND vs AFG Test: ஆப்கானிஸ்தான் எதிரான ஒரே ஒரு டெஸ்ட்.. இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ!
சுப்மன் கில்
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 19 May 2026 17:31 PM IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டிகள் (IND vs AFG Test) கொண்ட தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ரிஷப் பந்த் தனது துணை கேப்டன் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில், கே.எல். ராகுல் (KL Rahul) புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்திய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் ஆட்டம் சிறப்பானதாக இல்லை. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 4 இன்னிங்ஸ்களில் ரிஷப் பண்ட் வெறும் 49 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன்பிறகு, ஐபிஎல் போட்டிகளிலும் பண்டின் ஆட்டம் மோசமாகவே இருந்து வருகிறது. அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், 3 புதிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். எதிர்பார்த்தபடியே, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் இருந்து ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: இந்திய அணிக்கு சஞ்சுவை கேப்டனாக கொண்டு வாங்க.. முன்னாள் பயிற்சியாளர் வலுவான குரல்!

ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:


சுப்மான் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் (துணை கேப்டன்), சாய் சுதர்ஷன், ரிஷப் பண்ட், தேவ்தத் படிக்கல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே மற்றும் மானவ் சுதார்.

ALSO READ: சுதர்சன், படிக்கல் புறக்கணிப்பு.. முத்தரப்பு தொடருக்கான இந்திய அணி விவரம்!

இந்தியா – ஆப்கானிஸ்தான் முழு அட்டவணை

இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான ஒரெ ஒரு டெஸ்ட் போட்டி வருகின்ற 2026 ஜூன் 6 முதல் 10 வரை புது சண்டிகரில் நடைபெறும். தொடர்ந்து, இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூன் 14 அன்று தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 2026 ஜூன் 14 அன்று தர்மசாலாவிலும், இரண்டாவது போட்டி வருகின்ற 2026 ஜூன் 17 அன்று லக்னோவிலும் , இறுதி ஒருநாள் போட்டி வருகின்ற 2026 ஜூன் 20 அன்று சென்னையிலும் நடைபெறும்.

Follow Us