Team India: டெஸ்டில் பறிபோன துணை கேப்டன் பதவி.. சோகத்தில் ரிஷப் பண்ட்? காரணம் என்ன?
Rishabh Pant Test Vice Captaincy: சுப்மன் கில் டெஸ்ட் அணியின் கேப்டனாகத் தொடரும் நிலையில், ரிஷப் பண்டை துணை கேப்டன் பதவியிலிருந்து திடீரென நீக்கியது குறித்து தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அகர்கரின் கூற்றுப்படி, ரிஷப் பண்ட் எந்தவித அழுத்தமும் இல்லாமல் தனது ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று தேர்வுக் குழு விரும்புகிறது.
இந்திய அணி (Indian Cricket Team) அடுத்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. நேற்று அதாவது 2026 மே 19ம் தேதி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியை அறிவித்தது. குறிப்பாக, டெஸ்ட் அணியில் ஒரு ஆச்சரியமான மாற்றம் காணப்பட்டது. ஏனெனில் ரிஷப் பண்ட் இனி துணை கேப்டனாக இல்லை. கே.எல். ராகுல் புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்மன் கில் டெஸ்ட் அணியின் கேப்டனாகத் தொடரும் நிலையில், ரிஷப் பண்டை துணை கேப்டன் பதவியிலிருந்து திடீரென நீக்கியது குறித்து தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அகர்கரின் கூற்றுப்படி, ரிஷப் பண்ட் எந்தவித அழுத்தமும் இல்லாமல் தனது ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று தேர்வுக் குழு விரும்புகிறது.
ALSO READ: ஆப்கானிஸ்தான் எதிரான ஒரே ஒரு டெஸ்ட்.. இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ!
ரிஷப் பண்ட்டிடமிருந்து துணை கேப்டன் பதவி ஏன் பறிக்கப்பட்டது?
இந்திய அணி அறிவிக்கப்பட்ட பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் கூறுகையில், ”ரிஷப் பண்ட் டெஸ்ட் வடிவத்தில் ஒரு சிறந்த வீரர். அவர் தற்போது ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பெறவில்லை. ரிஷப் எப்போதுமே இருந்ததைப் போலவே ஒரு சிறந்த டெஸ்ட் வீரராகத் தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். டெஸ்ட் அணியில் அவரது இடம் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் ரிஷப் பண்ட் சேர்க்கப்படவில்லை. இரண்டு புதிய விக்கெட் கீப்பர் தேர்வுகளுடன், ஒருநாள் அணி தற்போது ஒரு புதிய திசையில் பயணித்து வருகிறார்” என்று தெளிவுபடுத்தினார். கே.எல். ராகுல் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் ஒருநாள் அணிக்கான விக்கெட் கீப்பர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.




ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி , ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், வாஷிங்டன் சுந்தர். யாதவ், குர்னூர் ப்ரார், ஹர்ஷ் துபே
ALSO READ: ரோஹித், கோலிக்கு இடம்.. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!
ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் (துணை கேப்டன்), சாய் சுதர்ஷன், ரிஷப் பண்ட், தேவ்தத் படிக்கல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே மற்றும் மானவ் சுதார்.