Team India: ஒருபோதும் முயற்சியை கைவிடாத சூர்யகுமார் யாதவ்.. ஆதரவாக களமிறங்கிய ரோஹித் சர்மா!
Suryakumar Yadav: 2024-ல் இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு, சூர்யகுமார் யாதவ் கேப்டனாக 42 இன்னிங்ஸ்களில் 932 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இருப்பினும், 6 அரை சதங்களை மட்டுமே அடிக்க முடிந்தது. தனது முழு டி20 கிரிக்கெட் வாழ்க்கையில், சூர்யகுமார் யாதவ் 113 போட்டிகளில் 3272 ரன்கள் எடுத்துள்ளார்.
2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் புதிய இந்திய டி20 கேப்டனாகப் பொறுப்பேற்றார். அவரது கேப்டன்சியின் கீழ், 2026 டி20 உலகக் கோப்பையை வென்று இந்திய அணி (Indian Cricket Team) அசத்தியது. ஆனால் சூர்யகுமார் யாதவின் மோசமான தனிப்பட்ட ஃபார்ம் அவருக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, சூர்யகுமார் யாதவின் சகாப்தம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் புதிய டி20 கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார். இதற்கிடையில், சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) குறித்து ரோஹித் சர்மா ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ALSO READ: கேப்டன் பதவி இழப்பு! முதல் முறையாக மனம் திறந்த சூர்யகுமார் யாதவ்.. வைரலாகும் பதிவு!




ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் சிவம் துபே உள்ளிட்ட இந்திய அணியின் பல நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ள மும்பை டி20 லீக், தற்போது செய்திகளில் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா மும்பை டி20 லீக்கின் விளம்பரத் தூதராக உள்ளார். சூர்யகுமார் யாதவின் பயணம் எளிதானதாக இருந்ததில்லை என்றும், ஆனால் அவரது விடாமுயற்சியே அவரை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது என்றும் கூறி, அவர் சூர்யகுமார் யாதவிற்கு ஆதரவு தெரிவித்தார்.
சூர்யகுமார் யாதவிற்கு ஆதரவாக பேசிய ரோஹித் சர்மா:
🚨 ROHIT SHARMA STATEMENT ON SURYAKUMAR YADAV AFTER SACKED FROM T20I 🚨
Rohit Sharma said 🗣️,
“He made his India debut at 31, I think, if I’m not wrong. Which means that he never gave up. He always wanted to be in the fight and when it came, he wanted to grab it with both hands… pic.twitter.com/SIotzJkDo9
— Cricket Central (@CricketCentrl) June 6, 2026
ரோஹித் ஷர்மா கூறுகையில், “சூர்யகுமார் யாதவுக்கு எதுவும் எளிதாக இருந்ததில்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். சூர்யகுமார் யாதவ் தனது 31வது வயதில் இந்திய அணிக்காக அறிமுகமானார். அதாவது அவர் ஒருபோதும் முயற்சியைக் கைவிடவில்லை. அவர் எப்போதும் போராடிக்கொண்டே இருந்தார், வாய்ப்பு வந்தபோது அதை இரு கைகளாலும் பற்றிக்கொள்ள விரும்பினார். அதிலும் அவர் வெற்றி பெற்றார்” என்றார்.
2024-ல் இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு, சூர்யகுமார் யாதவ் கேப்டனாக 42 இன்னிங்ஸ்களில் 932 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இருப்பினும், 6 அரை சதங்களை மட்டுமே அடிக்க முடிந்தது. தனது முழு டி20 கிரிக்கெட் வாழ்க்கையில், சூர்யகுமார் யாதவ் 113 போட்டிகளில் 3272 ரன்கள் எடுத்துள்ளார்.
ALSO READ: சச்சினின் சாதனையை முறியடிக்க வைபவிற்கு வாய்ப்பு.. இந்திய அணிக்காக இதுவரை அறிமுகமான இளம் வீரர்கள்!
ஷ்ரேயாஸ் ஐயர் மீது நம்பிக்கை..
ஷ்ரேயஸ் ஐயர் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து ரோஹித் ஷர்மாவும் கருத்து தெரிவித்தார். அதில், “ஐபிஎல் சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் தனது அணியை வழிநடத்திய விதத்தைப் பார்க்கும்போது, இந்திய அணியை சிறப்பாகக் கையாள்வார் என்று என்னால் கூற முடியும்,” என்றார். அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் ஸ்ரேயஸ் முதல் முறையாக இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.