AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: சச்சினின் சாதனையை முறியடிக்க வைபவிற்கு வாய்ப்பு.. இந்திய அணிக்காக இதுவரை அறிமுகமான இளம் வீரர்கள்!

Vaibhav Sooryavanshi: சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989ம் ஆண்டு, தனது 16 வயது மற்றும் 205 நாட்களில் இந்திய அணிக்காக அறிமுகமானார். வைபவிற்கு விளையாட வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என்பது அவரது அறிமுக ஆட்டத்தைப் பொறுத்தே அமையும். தற்போது, ​​சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மிக இளம் வயதில் அறிமுகமானவர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் வைத்திருக்கிறார்.

Team India: சச்சினின் சாதனையை முறியடிக்க வைபவிற்கு வாய்ப்பு.. இந்திய அணிக்காக இதுவரை அறிமுகமான இளம் வீரர்கள்!
சச்சின் டெண்டுல்கர் - வைபவ் சூர்யவன்ஷி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 Jun 2026 16:03 PM IST

15 வயதே ஆன இளம் அதிரடி பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயண அணி மட்டுமின்றி, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியிலும் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளார். வைபவ் சூர்யவன்ஷி, இந்திய அணியில் (Indian Cricket Team) சேர்க்கப்பட்ட உடனேயே, இந்திய அணிக்காக அறிமுகமான மிக இளம் வீரர் என்ற சாதனையை படைப்பார். வைபவ் சூர்யவன்ஷி தனது 15 வயது மற்றும் 71 நாட்களில் இந்திய அணிக்கு தேர்வானார். இதன்மூலம், சச்சினின் சாதனையை முறியடிக்க வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது.

ALSO READ: சச்சின் போலவே சூர்யவன்ஷிக்கும் சிறப்பு அனுமதி.. விதியை தளர்த்திய பிசிசிஐ.. என்ன தெரியுமா?

இந்தியா, அயர்லாந்துக்கு எதிராக வருகின்ற 2026 ஜூன் 26ம் தேதி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டியானது வருகின்ற 2026 ஜூன் 26 அன்று நடைபெறும். இந்தப் போட்டியில் விளையாட வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைத்தால், தனது 15 வயது மற்றும் 91 நாட்களில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாவார். இதன் மூலம், சூர்யவன்ஷி சச்சினைப் பின்னுக்குத் தள்ளுவார்.

சச்சின் அறிமுகமானப்போது வயது என்ன..?

சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989ம் ஆண்டு, தனது 16 வயது மற்றும் 205 நாட்களில் இந்திய அணிக்காக அறிமுகமானார். வைபவிற்கு விளையாட வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என்பது அவரது அறிமுக ஆட்டத்தைப் பொறுத்தே அமையும். தற்போது, ​​சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மிக இளம் வயதில் அறிமுகமானவர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் வைத்திருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயது மற்றும் 205 நாட்களில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, லெக்-ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா, இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான 2வது இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர் தனது 17 வயது மற்றும் 75 நாட்களில், கடந்த 2006 மார்ச் 9ம் தேதி மொஹாலியில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார். மற்றொரு லெக்-ஸ்பின்னர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் தனது 17 வயது மற்றும் 118 நாட்களில், 1983 ஏப்ரல் 28 அன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

ALSO READ: 15 வயதில் டீம் இந்தியாவுக்கு தேர்வு.. சச்சினின் சாதனையை முறியடித்த சூர்யவன்ஷி!

கடந்த 2002ம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி, பார்த்திவ் படேல் தனது 17 வயது மற்றும் 152 நாட்களில், டிரென்ட் பிரிட்ஜில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானபோது, ​​மிக இளம் வயது விக்கெட் கீப்பர் என்ற பெருமையுடன் வரலாற்றில் தனது பெயரைப் பொறித்தார். மிக சமீபத்தில், ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், 2017ம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி, தனது 18 வயது மற்றும் 69 நாட்களில், மொஹாலியில் இலங்கைக்கு எதிராக தனது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அறிமுகமானார். மேலும், 2017ம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி, தனது 18 வயது மற்றும் 80 நாட்களில், அதே இலங்கைக்கு எதிராக தனது டி20 சர்வதேசப் போட்டியிலும் அறிமுகமானார்.

 

Follow Us