AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Team India: வெளியேறும் அஜித் அகர்கர்.. புதிய தேர்வாளர் யார்..? பிசிசிஐ விளக்கம்!

BCCI's New Chief Selector Search: பிசிசிஐ புதிய தலைமைத் தேர்வாளரைத் தேடுகிறது. அஜித் அகர்கர் அக்டோபர் 4-ஆம் தேதியுடன் பதவி விலகுகிறார். வாரியம் அவசரப்படாமல் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும். அகர்கரின் பதவிக்காலத்தில் வெற்றிகள் இருந்தாலும் சர்ச்சைகளும் எழுந்தன. புதிய தேர்வாளர் விராட், ரோஹித் குறித்து முடிவெடுத்து அடுத்த ஆண்டு உலகக் கோப்பை அணியைத் தேர்வு செய்ய வேண்டும். இது இந்திய கிரிக்கெட்டில் ஒரு முக்கிய காலகட்டமாகும்.

Team India: வெளியேறும் அஜித் அகர்கர்.. புதிய தேர்வாளர் யார்..? பிசிசிஐ விளக்கம்!
அஜித் அகர்கர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Sep 2026 10:02 AM IST

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தற்போது ஒரு பெரும் சவாலை எதிர்கொண்டு வருகிறது. அதன்படி, இந்திய ஆண்கள் சீனியர் அணிக்கு (Indian Cricket Team) புதிய தலைமைத் தேர்வாளரைத் தேர்ந்தெடுப்பது பெரிய வேலையாக உள்ளது. விரைவில் அஜித் அகர்கரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், பிசிசிஐ தேர்வுக் குழுவிற்கு ஒரு புதிய தலைவரைத் தேடி வருகிறது. இதைச் செய்வதற்கு பிசிசிஐக்கு போதுமான அவகாசம் உள்ளது என்று பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சாய்கியா தெரிவித்துள்ளார்.

ALSO READ: கோவாவில் ஐபிஎல் 2027 ஏலம்.. இதுவே எங்கள் வியூகம்.. ட்விஸ்டை உடைத்த பிசிசிஐ!

அகர்கரின் பதவிக்காலம் முடிவடைவது எப்போது..?

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருக்கும் அஜித் அகர்கரின் பதவிக்காலம் வருகின்ற 2026 அக்டோபர் 4-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தனது ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை என அஜித் அகர்கர் பிசிசிஐயிடன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தலைமைத் தேர்வாளராக அவரது பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வரும். அஜித் அகர்கரின் பதவிக்காலம் ஏற்கனவே கடந்த 2026 செப்டம்பர் 18-ஆம் தேதியே தனது இந்த முடிவை பிசிசிஐ-க்கு தெரிவித்திருந்தார்.

அஜித் அகர்கருக்குப் பதிலாக யாரை நியமிப்பது என்பதில் பிசிசிஐ அவசரப்படவில்லை என்றும், அவர் பதவி விலகிய பிறகு இதுகுறித்து முடிவெடுக்கும் என்றும் பிசிசிஐ செயலாளர் சைகியா கூறியுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சைகியா, “அஜித் அகர்கரைப் பொறுத்தவரை, அவரது பதவிக்காலம் 2026 அக்டோபர் 4ம் தேதியுடன் முடிவடைகிறது. 2026 அக்டோபர் 4ம் தேதி வரை எங்களுக்குப் போதுமான அவகாசம் உள்ளது. 2026 அக்டோபர் 4ம் தேதிக்குப் பிறகு காலியாக உள்ள பதவி குறித்து நாங்கள் முடிவெடுப்போம். 4-ஆம் தேதி வரை எங்களுக்குப் போதுமான அவகாசம் உள்ளது. பிசிசிஐ ஒரு முடிவை எடுத்தவுடன், அது பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்,” என்று கூறினார்.

ALSO READ: இந்தியாவை திணறடிக்குமா? டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

அஜித் அகர்கரின் செயல்திறன்:

அஜித் அகர்கரின் பதவிக்காலத்தில், இந்தியா இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்றதுடன், சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றியது. இருப்பினும், வருகின்ற 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பங்கேற்பது குறித்த முடிவு, அல்லது உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு சூர்யகுமார் யாதவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமித்த முடிவு உட்பட, இந்தக் காலகட்டத்தில் கணிசமான சர்ச்சைகளும் எழுந்தன. புதிய தலைமைத் தேர்வாளரைப் பொறுத்தவரை, விராட் மற்றும் ரோஹித் மீதான அவரது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தேர்வுக் குழுவின் புதிய தலைவர், வருகின்ற 2027ம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணியைத் தேர்வு செய்யும் பொறுப்பை ஏற்பார்.

 

Follow Us