ICC Womens T20 World Cup 2026: டி20யில் நெதர்லாந்தை முதல் முறையாக எதிர்கொள்ளும் இந்திய அணி.. யாருக்கு சாதகம்..?
India W vs Netherlands W: 2026ம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடர் 10வது பதிப்பாகும். இது நெதர்லாந்துக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த உலகக் கோப்பையில் நெதர்லாந்து பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் நெதர்லாந்து, வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் (ICC Womens T20 World Cup 2026) ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி (Indian Womens Cricket Team), தங்களது பயணத்தை வெற்றியுடன் தொடங்கியது. கடந்த 2026 ஜூன் 14ம் தேதி பாகிஸ்தானை வீழ்த்தி, இத்தொடரில் இந்தியா தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. எனவே, இந்திய அணி இப்போது தங்களது இரண்டாவது தொடர்ச்சியான வெற்றியின் மூலம் தங்களது வெற்றிப் பயணத்தைத் தொடர முயற்சிக்கும். இரண்டாவது போட்டியில் இந்திய அணி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியானது இன்று அதாவது 2026 ஜூன் 17ம் தேதி லீட்ஸில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஹெடிங்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் தொடங்கும்.
ALSO READ: முதலிடத்தில் அடைக்கலமான ஆஸ்திரேலியா.. இந்திய மகளிர் எத்தனையாவது இடம்..? புள்ளிகள் பட்டியல் விவரம்!
டி20 வரலாற்றில் இரு அணிகளும் முதல் முறையாக நேருக்கு நேர்:
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியும் நெதர்லாந்தும் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும். நெதர்லாந்தை விட இந்திய அணி சிறந்த அணி என்பதால், ஹர்மன் படையே ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், நெதர்லாந்து அணி அவ்வளவு எளிதாக போட்டியை விட்டு கொடுக்காது என்று தெரிகிறது.




ஒருநாள் போட்டியை பொறுத்தவரை நேருக்கு நேர்:
இந்திய மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே இதுவரை மொத்தம் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த 3 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால், 2000ம் ஆண்டிற்குப் பிறகு இரு அணிகளும் சர்வதேசப் போட்டியில் விளையாடவில்லை. எனவே, 26 ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளுக்கும் இடையே ஒரு சர்வதேசப் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியின் மூலம், 26 ஆண்டுகால ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வரும்.
நெதர்லாந்தின் டி20 உலகக் கோப்பை அறிமுகம்
2026ம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடர் 10வது பதிப்பாகும். இது நெதர்லாந்துக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த உலகக் கோப்பையில் நெதர்லாந்து பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் நெதர்லாந்து, வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது. எனவே, தற்போது இந்திய அணிக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியைத் தவிர்த்து வெற்றிப் பயணத்தைத் தொடங்குவது என நெதர்லாந்துக்கு இரட்டைச் சவால் காத்திருக்கிறது.
ALSO READ: பாகிஸ்தானை வீழ்த்தியதும் குவிந்த சாதனைகள்.. இந்திய அணி படைத்த 8 ரெக்கார்ட்ஸ்!
இந்திய மகளிர் அணியின் நிலை என்ன?
இதற்கிடையில், 2026 மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் உள்ளது. பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் நேரடியாக 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம், இந்திய அணி +3.200 என்ற நிகர ரன் ரேட்டுடன் தனது கணக்கில் 2 புள்ளிகளை சேர்த்துள்ளது.