AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

‘வார்த்தைகளே இல்லை’ – உடைந்து போன விராட்கோலி.. கூட்ட நெரிசல் விபத்துக்கு வருத்தம்!

Bengaluru Stadium Stampede : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் முதல் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விராட் கோலி உள்ளிட்டோர் ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.

‘வார்த்தைகளே இல்லை’ – உடைந்து போன விராட்கோலி.. கூட்ட நெரிசல் விபத்துக்கு வருத்தம்!
விராட் கோலி
C Murugadoss
C Murugadoss | Published: 05 Jun 2025 09:43 AM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி முதல் ஐபிஎல் பட்டத்தை வென்று வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த மகிழ்ச்சி சோகமாக மாறியுள்ளது. சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். மற்றும் 33 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து ஆர்சிபி நட்சத்திர வீரர் விராட் கோலி தனது ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஆர்சிபி ரசிகர்கள் நீண்ட காலமாக ஐபிஎல் வெற்றிக்கு காத்திருக்கிறார்கள், 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்ற பிறகு, பெங்களூருவை அடைந்ததும் ஆர்சிபி அணிக்கு வரலாறு காணாத வரவேற்பு கிடைத்தது.

வெற்றி கொண்டாட்டங்கள் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றன. இருப்பினும், ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக வந்ததால் நிலைமை கட்டுப்பாட்டை மீறியது. மைதானத்தின் கொள்ளளவு 35,000 மட்டுமே இருந்த நிலையில், சுமார் 2 முதல் 3 லட்சம் ரசிகர்கள் கூடினர். வாயில்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

விராட் கோலி சொன்னது என்ன?

இந்த துயர சம்பவத்திற்கு விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் இரங்கல் தெரிவித்துள்ளார். “பேச வார்த்தைகளே இல்லை. முற்றிலும் அதிர்ச்சியடைந்தேன்,” என்று அவர் எழுதினார். ஆர்சிபி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையையும் அவர் தனது பதிவில் பகிர்ந்து கொண்டார். “பெங்களூரில் நடந்த இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் குறித்து ஊடக அறிக்கைகள் மூலம் அறிந்து நாங்கள் மிகவும் வருத்தமடைந்தோம். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. துயரமடைந்த குடும்பங்களுக்கு ஆர்சிபி தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நிலைமை குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டவுடன், நாங்கள் உடனடியாக எங்கள் அட்டவணையை மாற்றி உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையைப் பின்பற்றினோம். எங்கள் அனைத்து ஆதரவாளர்களும் தயவுசெய்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று ஆர்சிபி தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விராட் கோலி இன்ஸ்டா பதிவு

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

கூட்ட நெரிசல் இருந்தபோதிலும், மைதானத்திற்குள் சிறிது நேரம் கொண்டாட்டங்கள் நடந்தன. ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதர் மற்றும் விராட் கோலி ஆகியோர் ரசிகர்களிடம் உரையாற்றினர். இருப்பினும், வெளியே நடந்த சோகம் குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. கர்நாடக முதல்வர் சித்தராமையா சம்பவ இடத்தை பார்வையிட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்தார். சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு நீதிபதிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆர்சிபியின் வரலாற்று வெற்றியின் நாளில் நடந்த இந்த துயர சம்பவம், விளையாட்டு உலகையும் ரசிகர்களையும் மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக அரசு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. இந்த சம்பவம் எதிர்காலத்தில் இதுபோன்ற பெரிய நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளின் முக்கியத்துவம் எந்த அளவுக்கு கொடுக்கப்பட்ட வேண்டுமென்பதை காட்டுவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்

Follow Us