AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

MS Dhoni: தோனி குறித்து இப்படி ஒரு சீக்ரெட்..? உண்மையை உடைத்த ரஹானே!

Ajinkya Rahane About MS Dhoni: கடந்த ஐபிஎல் 2026 சீசனில் தோனி காயம் காரணமாக முழு சீசனிலும் விளையாடவில்லை. இதைதொடர்ந்து, ஃபிளெமிங் வெளியேறிய பிறகு, எம்.எஸ்.தோனி சிஎஸ்கே பயிற்சியாளராக தொடர்வார் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், தோனி குறித்து சமீபத்தில் ஓய்வு பெற்ற அஜிங்க்யா ரஹானே பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

MS Dhoni: தோனி குறித்து இப்படி ஒரு சீக்ரெட்..? உண்மையை உடைத்த ரஹானே!
எம்.எஸ்.தோனி - அஜிங்க்யா ரஹானே
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Aug 2026 17:03 PM IST

முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி (MS Dhoni) கடந்த 20 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்திய அணியில் உள்ள பல இளம் வீரர்களுக்கு தோனி ஒரு முக்கிய முகமாக பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட்டிற்கு தோனி ஆற்றிய மிகச்சிறந்த பங்களிப்புகள் இருந்தபோதிலும், தோனி எந்தவொரு கடைசி போட்டிலும் விளையாடாமலே தனது ஓய்வை அறிவித்து விடைபெற்றார். 2020 ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்து 6 ஆண்டுகள் கழிந்தபிறகும், இன்னும் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்காக விளையாடி வருகிறது. கடந்த ஐபிஎல் 2026 சீசனில் தோனி காயம் காரணமாக முழு சீசனிலும் விளையாடவில்லை. இதைதொடர்ந்து, ஃபிளெமிங் வெளியேறிய பிறகு, எம்.எஸ்.தோனி சிஎஸ்கே பயிற்சியாளராக தொடர்வார் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், தோனி குறித்து சமீபத்தில் ஓய்வு பெற்ற அஜிங்க்யா ரஹானே பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

ALSO READ: இலங்கை மண்ணில் இரட்டை சதம்.. 3 இந்திய பேட்ஸ்மேன்கள் படைத்த சாதனை லிஸ்ட்!

தோனி குறித்து ரஹானே பேசியது என்ன..?


ஓய்வுக்குப் பிந்தைய தனது முதல் நேர்காணலில், எம்.எஸ். தோனி குறித்த ஒரு முக்கிய ரகசியத்தை அஜிங்க்யா ரஹானே வெளிப்படுத்தியுள்ளார். அதில், “எம்.எஸ்.தோனி மற்றவர்களைப் போலவே மிகவும் இயல்பான ஒரு மனிதர். அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் கதவு 24 மணி நேரமும் திறந்தே இருக்கும் என்பது உண்மைதான். கதவு திறந்திருந்தால், யார் வேண்டுமானாலும் உள்ளே வரலாம்; கிரிக்கெட் பற்றிப் பேசலாம், அவருடன் நேரம் செலவிடலாம் அல்லது சும்மா ஓய்வெடுக்கலாம் என்பதை அனைவருக்கும் உணர்த்த அவர் கையாண்ட ஒரு நுட்பமான வழிதான் அது.

ALSO READ: 278வது கேப்.. ஓய்வு பெற்றது ஏன்..? காரணத்தை விளக்கும்போது கண்கலங்கிய ரஹானே!

சில சமயங்களில் அவரது அறையில் 10 அல்லது 15 பேர் இருப்பார்கள். சில நேரங்களில் ஒட்டுமொத்த அணியுமே கூட அங்கு இருக்கும். ஆனால் கதவு மூடப்பட்டிருந்தால், யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதாவது, அது எம்.எஸ்.-ஸின் உறங்கும் நேரம் என்று அர்த்தம்.” என்று தெரிவித்தார்.

Follow Us