AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

த்ரில்லிங்கான பைக் ரைடு + படகு சவாரி = அல்டிமேட் காம்போ.. இந்த இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

Kollimalai Tourist Place: தமிழகத்தில் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருக்கும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லி மலை சுற்றுலா தளம் மிகவும் பிரபலம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் என்னென் சுற்றுலா இடங்கள் உள்ளன என்பைத இந்தப் பதிவில் பார்க்கலாம்.

த்ரில்லிங்கான பைக் ரைடு + படகு சவாரி = அல்டிமேட் காம்போ.. இந்த இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க!
கொல்லிமலை டூரிஸ்ட் ஸ்பாட்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 10 Apr 2026 13:50 PM IST

தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை தவிர்க்க முடியாத சுற்றுலாத் தளமாக விளங்கி வருகிறது. இங்கு, இயற்கை அழகால் நிரம்பி இருக்கும் கங்கை நீர்வீழ்ச்சி முக்கிய பங்கு வைத்து வருகிறது. இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 1000 படிகள் கீழ்நோக்கி இறங்கி சென்றால் தான் கங்கை நீர்வீழ்ச்சியை கண்கள் குளிர கண்டு ரசிக்க முடியும். இதை பார்த்து ரசித்த பின்னர், மாசிலாமலை அருவியை சுற்றிப் பார்க்க செல்லலாம். அங்கு சுற்றிப் பார்ப்பதோடு மட்டுமின்றி பாதுகாப்பான முறையில் குத்தாட்டம் போட்டு குளித்து மகிழலாம். கொல்லிமலை பகுதிக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாகவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாகவும் இந்த மாசிலா மலை அருவி அமைந்துள்ளது. இதை பார்த்துவிட்டு சற்று நகர்ந்தால் வாசலூர்பட்டி படகு இல்லம் அமைந்துள்ளது.

தனி தீவில் படகு சவாரி செய்யும் அனுபவம்

இயற்கையாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஏரி படகு சவாரியில் பசுமையான சூழலையும், பெரிய… பெரிய… அளவில் அமைந்திருக்கும் மலைகளை ரசித்தவாறும் இயற்கை தீவில் வாழ்க்கை நடத்துவது போல ஒரு வித வித்தியாசமான படகு சவாரி அனுபவத்தை இந்த இடம் நிச்சயமாக வழங்கும் என்பதில் ஐயமில்லை. இதை முடித்த கையோடு அருகிலேயே நம்மளை வரவேற்கும் விதமாக அமைந்திருக்கிறது ஒரு தாவரவியல் பூங்கா. அந்த தாவரவியல் பூங்காவுக்கு செல்லாமல் வந்தால் எப்படி.

மேலும் படிக்க: கொளுத்தும் வெயிலுக்கு குளிர்ச்சியான சுற்றுலா தலம்… தென்தமிழகத்தின் சொர்க்கம்… பரபரப்பான வாழ்வில் இருந்து இளைப்பாற இங்க போங்க!

காற்றுக்கு தலையாட்டும் ரோஜா தோட்டம்

இங்கு, பல்வேறு விதமான மூலிகை செடிகள் அடங்கிய பண்ணைகள், அடிக்கிற காற்றுக்கு தலையாட்டும் ரோஜா பூக்கள் தோட்டம், குழந்தைகள் விளையாடும் மகிழ்வதற்கான பூங்கா, சுற்றுலா பயணிகளுக்கு திரில்லிங்கை கூட்டுவதற்கான வியூ பாயிண்ட், அத்துடன் பசுமை குடில் ஆகியவை அமைந்துள்ளது. இவற்றையெல்லாம் சுற்றிப் பார்ப்பதற்கு நிச்சயமாக ஒரு நாள் போதாது என்றே கூறலாம். இந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து தான் செல்ல முடியும்.

த்ரில்லிங்கான பைக் ரைடுக்கு ஏற்ற இடம்

அதிலும், பைக் மற்றும் கார்களில் பயணம் செய்வது சற்று சவாலானதாக இருக்கும். பைக் ரைடர்ஸ்கள் திரில்லிங்கான பைக் ரைடை அனுபவிப்பதற்கு கொண்டை ஊசி வளைவுகள் வழியாக கொல்லிமலை சென்று பார்க்கலாம். இவ்வளவு சுற்றுலா இடங்கள் அமைந்துள்ள கொல்லி மலை நாமக்கள் நகர பகுதியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு சுமார் ஒன்றரை மணி நேரத்தில் சென்றடையலாம்.

கோடை சுற்றுலாவுக்கு ஏற்ற இடம்

அப்புறம் என்ன மக்களே… பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விரைவில் கோடை விடுமுறை வரவுள்ளது. இந்த விடுமுறையை என்ஜாய் பண்ணுவதற்காக ஒரு முறை கொல்லி மலைக்கு சுற்றுலா சென்று வாருங்கள். ஏற்கனவே, சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருக்கும் சுற்றுலா பயணிகள் தங்களது பட்டியலில் கொல்லிமலையையும் ஒரு தேர்வாக வைத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க: நெருங்கி வரும் கோடை விடுமுறை.. ஊட்டி மலை ரயில் குறித்து குளு குளு அறிவிப்பு.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

Follow Us