தென்காசி அருகே மறைந்திருக்கும் சிம்பிலான சுற்றுலா தலம்… குடும்பத்துடன் தங்கி பொழுதை கழிக்க ஏற்ற இடம்!
Ramanathi Dam Tourist Spot: தென்காசி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில், குடுபத்துடன் நாள் முழவதும் தங்கி பொழுதை கழிப்பதற்கு ஏற்ற வகையில் சிம்பிலான, பட்ஜெட் சுற்றுலா தலம் ஒன்று உள்ளது. அது எந்த இடம் ஆகிய விவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தென்காசி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் ஒன்றாக உள்ளது ராமநதி அணை. இந்த அணையானது தென்காசி மாவட்டத்தில் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த அணையானது 1965- ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 84 அடி முழு கொள்ளளவில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரில் குளிப்பதற்காக தென்காசி, ஆலங்குளம், கடையம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல் புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் வருகை தருவார்கள். குடும்பத்துடன் இந்த பகுதிக்கு வந்து நாள் முழுவதும் தங்கி இருந்து பொழுதை கழிப்பதற்கு ஏற்ற இடம் ஆகும். அத்துடன், ராமநதி அணையிலிருந்து அதன் பின்புறமாக காட்டுப்பாதையில் நடந்து செல்லலாம்.
காட்டுப்பகுதியில் மலையில் இருந்து வரும் சிற்றோடை
அவ்வாறு செல்லும் வழியில் மலைப்பகுதியில் இருந்து வரும் நீர் சிற்றோடை போல செல்வதை கண் கூறாக கண்டு ரசிக்கலாம். இந்த பகுதி முழுவதும் சூரிய வெளிச்சம் உள்ளே வராத அளவுக்கு அதிக அளவிலான மரங்கள், செடிகள், கொடிகள் வளர்ந்து காணப்படும். மலைப்பகுதியில் இருந்து வழிந்து வரும் சிற்றோடையில் பல்வேறு பகுதிகளில் குளிப்பதற்கான இடங்கள் உள்ளன. அத்துடன், அந்தப் பகுதியின் முழு அழகையும் கண்டு ரசிக்கலாம். மேலும், ராமநதி அணையின் மேல் பகுதியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைகளை பார்க்கும்போது உள்ளத்தில் ஒருவித புத்துணர்ச்சி எழும்.
மேலும் படிக்க: காபி தோட்டத்துக்கு மத்தியில்.. குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையில்.. சலிப்பு தட்டாத அழகான சுற்றுலா தலம்!




மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்…
அந்த அளவுக்கு அந்த திசை முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலை படர்ந்து விரிந்து காணப்படும். குடும்பத்துடன் சிம்பிளான சுற்றுலா, பட்ஜெட்க்கு ஏற்ற சுற்றுலா, சிம்பிலான ஒன்டே ட்ரிப் செல்ல விரும்பினால் இந்த பகுதிக்கு சுற்றுலா செல்லலாம். மேலும், ராமநதி அணையின் பின் பகுதியில் ஒரு கோவில் அமைந்துள்ளது. இதே போல, கடையம் பகுதியில் இருந்து ராமநதி அணைக்கு செல்லும் வழியில் வலது புறத்தில் தோரணமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான இந்த கோவிலில் மலை மீது முருகர் வீற்றுள்ளார்.
ஒரே இடத்தில் இன்ப சுற்றுலா-ஆன்மிக சுற்றுலா
ராமநதி அணைக்கு இன்ப சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் திரும்பி வருகையில், தோரணமலை முருகன் கோவிலுக்கு சென்று வரலாம். கடையம்- அம்பை சாலையில் இருந்து ராமநதி அணை செல்லும் வழி முழுவதும் காட்டுப் பகுதியாகும். இந்த பகுதிக்கு பைக், ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக மட்டுமே செல்ல முடியும். அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் சேவைகள் கிடையாது. கடையத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் ராமநதி அணை அமைந்துள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் ஓப்பன் டாப் பேருந்து திட்டத்துக்கு கைவிரிப்பு.. சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி.. என்ன காரணம்!