AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“நான் திரும்பி வந்துட்டேனு சொல்லு.. புதிய ரூபத்தில் தென்காசி பழைய குற்றால அருவி.. உற்சாக குளியல் குறித்து வெளியான அறிவிப்பு!

Tenkasi Old Courtallam Waterfalls: தென்காசி மாவட்டம், பழைய குற்றாலத்தில் கடும் வெள்ளப் பெருக்கின் போது, ஏற்பட்ட சேதத்தை சீரமைப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ள நிலையில், விரைவில் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட உள்ளன. சுமார் 133 நாள்களுக்கு பிறகு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

“நான் திரும்பி வந்துட்டேனு சொல்லு.. புதிய ரூபத்தில் தென்காசி பழைய குற்றால அருவி.. உற்சாக குளியல் குறித்து வெளியான அறிவிப்பு!
தென்காசி பழைய குற்றாலத்தில் விரைவில் குளிக்க அனுமதி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 28 Mar 2026 08:25 AM IST

தென்காசி மாவட்டம் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது இங்கு உள்ள குற்றால அருவிகளும், குளிர்ச்சியான காலநிலையும், தென்றல் தவிழும் தென்பொதிகை சாரலும் தான். ஏனென்றால், மூலிகை செடிகள் நிறைந்து வளர்ந்துள்ள காடுகளுக்கு மத்தியில் பெய்த இயற்கையான மழை நீர் ஆறாக ஓடி வந்து குற்றாலங்களில் தலைகீழாக கொட்டும் அருவிகள் தான் இவ்வளவு பெயருக்கும் மூல காரணமாகும். தற்போது, தென்காசி மாவட்டத்தில் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகள் உள்ளன. இந்த அருவிகளில் ஜூன் மாதம் முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால சீசன் தொடங்கி நடைபெறும். இந்த சீசனில் குற்றால அருவிகளில் உற்சாக குளியல் போடுவதற்காக தமிழகம் மட்டும் இன்றி வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குற்றாலத்துக்கு வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது.

குற்றால அருவிகளால் கட்டிபோடப்பட்டுள்ள பொதுமக்கள்

அந்த அளவுக்கு குற்றால அருவிகள் மற்றும் குற்றால சாரல் மழை அவர்களை கட்டி போட்டு உள்ளது. இந்த நிலையில், மெயின் அருவியில் முக்கிய சின்னமாக இருந்து வந்த தடுப்பு வளைவு கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டிருந்தது. இந்த தடுப்பு வளைவு மீண்டும் புதிதாக வடிவமைக்கப்பட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக குளிக்கும் வகையிலும், பாதுகாப்புடன் அமைக்கப்பட உள்ளது. இதேபோல, பழைய குற்றால அருவியில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக மிகப்பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டது.

மேலும் படிக்க: அண்ணா பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி.. மாணவிக்கு பாலியல் தொல்லை.. பேராசிரியர் கைது..

பழைய குற்றால அருவி பகுதிகள் சீரமைப்பு

இதில், பழைய குற்றால பகுதியில் இருந்த தடுப்புகள், கழிவறைகள், தரைதளங்கள் மற்றும் பழைய குற்றால அருவிக்கு செல்லும் சாலைகள் முழுமையாக சேதம் அடைந்திருந்தன. இதனை சீரமைக்கும் பணிகளில் சுற்றுலாத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, பழைய குற்றால அருவியில் ஏற்படும் காற்றாற்று வெள்ளத்தின் போது தடுப்புகள் அடித்து செல்லப்படாமல் இருப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக குளிப்பதற்காக நடுவில் சுவர் போன்ற அமைப்பு கட்டப்பட்டுள்ளது.

133 நாள்களுக்கு பிறகு பொதுமக்கள் குளிக்க அனுமதி

பழைய குற்றால அருவியில் சிரமைப்பு பணிகள் 90 சதவீதம் அளவுக்கு நிறைவடைந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, கோடை வெயில் காரணமாக பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று குறைவாகவே காணப்படுகிறது. கோடை வெயிலின் தாக்கம் குறைந்து, குற்றால சீசன் ஆரம்பிக்கும்போது, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். வெள்ளத்தில் ஏற்பட்ட சேதத்துக்கு பின்னர் சுமார் 133 நாள்களுக்குப் பிறகு மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் இங்கெல்லாம் இன்று மழை கொட்டும்.. வெயிலும் வதைக்கும்.. இன்றைய வானிலை அப்டேட்..

Follow Us