Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருமணத்திற்கு பிறகு காதலனுடன் சென்ற இளம் பெண்.. சரமாரியாக சுட்டுக் கொலை செய்த தந்தை!

Young Woman Brutally Killed By Her Father | மத்தியா பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் திருமணத்திற்கு பிறகு தனது கணவரை கைவிட்டுவிட்டு காதலனுடன் சென்றுள்ளார். இதன் காரணமாக கடும் ஆத்திரமடைந்த இளம் பெண்ணின் தந்தை அவரை சுட்டுக் கொலை செய்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு காதலனுடன் சென்ற இளம் பெண்.. சரமாரியாக சுட்டுக் கொலை செய்த தந்தை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Jan 2026 09:09 AM IST

போபால், ஜனவரி 15 : மத்திய பிரதேச (MP – Madhya Pradesh) மாநிலம், பிண்டு மாவட்டம், ஹரியா தபக் கிராமத்தை சேர்ந்தவர் முனீஷ் தனுக் என்பவர். இவருக்கு 21 வயதில் நித்தி என்ற மகள் இருந்துள்ளார். இந்த இளம் பெண்ணுக்கும் அவரது கிராமத்திற்கு அருகே வசிக்கும் இளைஞர் ஒருவருக்கும் 2025, டிசம்பர் மாதம் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.  இந்த நிலையில், அந்த இளம் பெண்ணின் தந்தையே அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருமணத்திற்கு பிறகு காதலனுடன் சென்ற இளம் பெண்

நித்தி திருமணம் செய்துக்கொள்வதற்கு முன்பில் இருந்தே தனது உறவுக்கார இளைஞரை காதலித்து வந்துள்ளார். திருமணமான பின்னர் அவர்களது உறவு தொடர்ந்த நிலையில், அது அப்படியே திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவரை கைவிட்ட நித்தி, தனது காதலனுடன் குவாலியர் கோட்வாலி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். அதுமட்டுமன்றி, அங்கு வைத்து இருவரும் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தனர்.

இதையும் படிங்க : 2026 குடியரசு தினவிழா…சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் வெளிநாட்டு முக்கியஸ்தர்…யார் அவர்!

மிகுந்த ஆத்திரத்தில் இருந்த இளம் பெண்ணின் தந்தை

தனது கணவரை கைவிட்விட்டுவிட்டு காதலன் உடன் சென்றதால் நித்தி மீது அவரது தந்தை கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், நித்தி வசிக்கும் இடம் குறித்து தகவல் அறிந்து அவர் அங்கே சென்றுள்ளார். அப்போது தன்னுடன் கிராமத்திற்கு வருமாறு அவர் நித்தியை அழைத்துள்ளார். அதன்படி, அவரும் கிராமத்திற்கு வந்துள்ளார். வந்த இடத்தில் தனியாக பேச வேண்டும் என நித்தியை அவரது தந்தை அழைத்துச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க : குளிர் அலை அலெர்ட்.. தமிழ்நாட்டில் கடும் குளிர்.. உறைந்து நிற்கும் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள்!

அப்போது தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அவர் தனது மகளை சரமாரியாக சுட்டுக் கொலை செய்துள்ளார். நித்தி சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், அதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நித்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக முனீஷை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.