5 வயது மகனை கொலை செய்துவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு.. கேரளாவில் பகீர் சம்பவம்!
Woman Killed 5 Years Old Son | கேரளாவில் பெண் ஒருவர் தனது 5 வயது மகனை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சூர், ஜனவரி 08 : கேரள (Kerala) மாநிலம், திருச்சூர் மாவட்டம், அம்பலக்காவு பகுதியை சேர்ந்தவர் மோகித் என்ற 34 வயது நபர். இவருக்கு திருமணமாகி ஷில்பா என்ற 30 வயது மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு அக்சயஜித் என்ற 5 வயது மகன் இருந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு மோகித்துக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் இரவு தனி அறையில் தூங்கிய நிலையில், அவரது மனைவி ஷில்பா தனது மகனுடன் வேறு ஒரு அறையில் தூங்கியுள்ளார்.
காலையில் பிணமாக கிடந்த மனைவி மற்றும் மகன்
தம்பதிகள் தனித்தனி அறையில் தூங்கிய நிலையில், காலையில் வெகு நேரமாகியும் ஷில்பா மற்றும் அவரது மகன் வெளியே வராமல் இருந்துள்ளனர். மோகித் கதவை தட்டி பார்த்துள்ளார். ஆனால், கதவும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர் அறையின் ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்துள்ளார். அப்போது அவரது மனைவி ஷில்பா பிணமாக தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தததையும், மகன் அசைவற்று கிடந்ததையும் கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
இதையும் படிங்க : 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற தந்தை.. மருந்து செலவு அதிகமாக உள்ளதால் கொடூர செயல்!




வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்
இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்து கிடந்த தாய் மற்றும் மகனின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையில், ஷில்பா தனது மகனை கொலை செய்துவிட்டு பிறகு தானும் தற்கொலை செய்துக்கொண்டது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : ஆந்திராவில் மிகப்பெரிய எரிவாயு கசிவு – தீ விபத்து காரணமாக புகை மண்டலமாக மாறிய கிராமம் – அதிர்ச்சி சம்பவம்
இரவு தூங்கும்போது ஷில்பா தனது மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ள நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.