15 நாட்கள் துப்பாக்கிச்சூடு பயிற்சி.. மனைவியை சுட்டுக்கொலை செய்த கணவன்!
Men Took Gun Shooting Training To Kill Wife | சேலத்தை சேர்ந்த கணவன், மனைவி தங்களது பிள்ளைகளுடன் பெங்களூரில் வசித்து வந்துள்ளனர். கணவனுக்கு, மனைவி மீது சந்தேகம் எழுந்து கொடுமை செய்து வந்த நிலையில், அவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
பெங்களூரு, ஜனவரி 04 : கர்நாடகா (Karnataka) மாநிலம், பெங்களூரு (Bengaluru) சோலூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி புவனேஸ்வரி என்ற மனைவி உள்ள நிலையில், அவர் தனியார் வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் சேலம் பகுதியை சேர்ந்தவர்கள். வேலை நிமித்தமாக தங்களது மகன் மற்றும் மகளுடன் பெங்களூரில் வசித்து வந்துள்ளனர்.
நடத்தையில் சந்தேகப்பட்டு கொடுமை செய்து வந்த கணவர்
இந்த நிலையில், பாலமுருகனுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் பலமுறை அவரை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் புவனேஸ்வரி, ஓராண்டாக தனது கணவரை பிரிந்து தனது பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அதுமட்டுமன்றி, விவாகரத்து கோரியும் அவர் விண்ணப்பித்திருந்துள்ளார். இந்த நிலையில், டிசம்பர் 24, 2025 அன்று வெஸ்ட் ஆஃப் கார்டு பகுதியில் நடந்து சென்றபோது புவனேஸ்வரியை அவரது கணவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க : குடிபோதையில் விமானி.. நிறுத்தப்பட்ட விமானம்.. ஏர் இந்தியா ஷாக் சம்பவம்
விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலமுருகனை கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது பாலமுருகன், தனது மனையின் மீது சந்தேகமடைந்து அவரை கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால், மனைவி தன்னை பிரிந்து சென்று விவாகரத்துக்கு விண்ணப்பித்தது குறித்து பாலமுருகன் கடும் ஆத்திரத்திற்கு உள்ளாகியுள்ளார். இதனால், மனைவியை கொலை செய்ய திட்டமிட்ட அவர், துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க : ஹெல்மெட்டுக்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு.. நடுங்கிப்போன குடும்பம்.. வெளியான ஷாக்கிங் வீடியோ
15 நாட்கள் துப்பாக்கி பயிற்சி பெற்றது அம்பலம்
இதற்காக தனது மனைவியை கொலை செய்ய பாலமுருகன் மூன்று முறை பீகாருக்கு சென்றதும், 15 நாட்கள் அங்கேயே தங்கி துப்பாக்கியை எப்படி கையாளுவது என்று பயிற்சி எடுத்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் 15 நாட்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் பயிற்சி முடிந்த உடன் பாலமுருகன் தனது மனைவியை சுட்டுக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதுமட்டுமன்றி, பாலமுருகன் முன்னதாக தனது மனைவியை கொலை செய்ய கூலிப்படையை சேர்ந்த ஒரு நபரிடம் பணம் கொடுத்து ஏற்பாடு செய்திருந்ததும் தெரிய வந்துள்ளது.