நீட் தேர்வு வினாத்தாளை வெளியிட்ட ஆசிரியர் கைது – வினாத்தாள் கசிந்தது எப்படி?
NEET Biology Question Paper Leak Case : நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில், புனேவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ தற்போது வரை 9 பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில், புனேவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ தற்போது வரை 9 பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் புனேவை சேர்ந்த ஆசிரியர் மனிஷா குருநாத் மந்த்ரே என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் புனேவில் உள்ள ஒரு பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவர் தேசிய தேர்வு முகமையில் நீட் தேர்வின் செயல்முறையில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
வினாத்தாள் கசிந்தது எப்படி?
சிபிஐ விசாரணையில் வெளியான தகவலின்படி, மனிஷா மந்தாரே, ஏற்கனவே கைது செய்யப்பட்ட மனிஷா வாக்மாரே என்ற மற்றொரு குற்றவாளியின் மூலம் நீட் மாணவர்களை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் தனது வீட்டில் சில மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தியதாக சிபிஐ தெரிவித்துள்ளது. அந்த வகுப்புகளில், முக்கியமான உயிரியியல், தாவரவியல், மற்றும் விலங்கியல் பகுதிகளில் வரும் கேள்விகள் மற்றும் அதற்கான சரியான விடைகளை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : NEET Exam Date : நீட் (யுஜி) க்கான புதிய தேர்வு தேதி அறிவிப்பு




இந்த நிலையில் அந்த சிறப்பு வகுப்பில் பங்கேற்ர மாணவர்களின் நோட்டுபுத்தகத்தில் எழுதியிருந்த பல கேள்விகள், மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட் தேர்வின் உண்மையான கேள்வித்தாளுடன் அப்படியே பொருந்தியதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இதனால் வினாத்தாள் கசிந்ததது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் டெல்லி, புனே, ஜெய்ப்பூர், குருகிராம், நாசிக், அக்லியானகர் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிரடி சோதனையில் ஈடுபட்டது. அப்போது மொபைல் போன்கள், லேப்டாப் , வங்கி ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய குற்றவாளி கைது
இந்த வழக்கில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட பிவி குல்கர்னி என்ற வேதியியல் பேராசிரியரையும் சிபிஐ கைது செய்யப்பட்டுள்ளது. அவர் தேசிய தேர்வு முகைமையை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவருக்கு நீட் தேர்வு வினாத்தாளை அணுகும் வசதி இருந்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாத இறுதியில், புனேவில் உள்ள தனது வீட்டில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பிவி குல்கர்னி ரகசிய வகுப்புகள் நடத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வகுப்புகளில், வேதியியல் பாடப்பிரிவில் இருந்து கேள்வி பதில்களை சொல்லிக்கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது மாணவர்களின் எழுதிய குறிப்புகளும் வினாத்தாளில் உள்ள கேள்விகளும் ஒன்றுபோல இருந்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : தகிக்கும் பாலைவனத்தில் உப்பளத் தொழிலாளர்களின் துயரம்: குஜராத்தின் அவல நிலை
இதற்காக மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக மூன்றாம் நபர் மூலம் மாணவர்களை அணுகி இந்த மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயர் கல்வித்துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த மே 12, 2026 சிபிஐ இந்த வழக்கை பதிவு செய்தது. தற்போது இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.