மே 20-ல் நாடு முழுவதும் மருந்து கடைகள் வேலை நிறுத்தம்.. முக்கிய அறிவிப்பு!
Medical Shops In All Over India Will Be Closed | மனிதர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக உள்ளது தான் மருந்தகங்கள். இந்த நிலையில், இந்தியா முழுவதும் உள்ள மருந்தகங்கள் மே 20, 2026 அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
சென்னை, மே 14 : மே 20, 2026 அன்று நாட்டில் உள்ள அனைத்து மருந்துக்கடைகளும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. ஆன்லைன் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி நடைபெறுவதாகவும், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கள் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மருந்தக உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடர்பாக மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, முறைப்படுத்தப்படாத ஆன்லைன் மருந்து விற்பனையால் நோயாளிகளின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. முறையான சரிபார்ப்புகள் இன்றி மருந்துகள் விநியோகம் செய்யப்படுவதால், ஒரே மருந்து சீட்டை பலமுறை பயன்படுத்தும் அவல நிலை உள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க : பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு.. என்ன காரணம்!
போதை தரக்கூடிய மருந்துகள் தடையின்றி கிடைக்கும் சூழல் உள்ளது
இது ஆன்டிபயாடிக், போதை தரக்கூடிய மருந்துகள் தடையின்றி கிடைக்க வழிவகை செய்கிறது. ஆன்லைன் நிறுவனங்கள் மருந்து விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, மருந்துகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறி வருகிறது. இந்த தொழிலை நம்பியுள்ள சுமார் 5 கோடி மக்களின் வாழ்வாதாரமும், அதனால் மருந்தங்களின் வாழ்வாதாராமும் கேள்விக்குறியாக மாறி உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஈரான் போர் எதிரொலி: தங்கம், வெள்ளி இறக்குமதி வரி 15% ஆக உயர்வு
இந்த தொழிலை நம்பியுள்ள சுமார் 5 கோடி மக்களின் வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்படும். இதனை கண்டிக்கும் விதமாக இந்தியா முழுவதும் 20 ஆம் தேதி மருந்துக்கடைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.