AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனியார் ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. வாரத்தில் 2 நாள்கள் “work from home” கட்டாயம்.. அதிரடியாக வெளியான முக்கிய அறிவிப்பு!

Private Employees Work From Home : தனியார் நிறுவன ஊழியர்கள் வாரத்தில் இரு நாள்கள் வீட்டில் இருந்து பணி செய்யலாம் என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். எரிபொருள் சிக்கனத்தை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தனியார் ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. வாரத்தில் 2 நாள்கள் “work from home” கட்டாயம்.. அதிரடியாக வெளியான முக்கிய அறிவிப்பு!
தனியார் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணி செய்ய உத்தரவு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 14 May 2026 16:56 PM IST

நாட்டில் எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வகையில், டெல்லியில் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வாரத்துக்கு இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து பணி செய்யலாம் என்று மாநில முதல்வர் ரேகா குப்தா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த முடிவுகள் நாளை வெள்ளிக்கிழமை ( மே 15- ஆம் தேதி) முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, டெல்லியில் எரிபொருள் சிக்கனத்தை குறைக்கும் வகையில் தனது அதிகாரப்பூர்வ வாகன அணிவகுப்பை கிட்டத்தட்ட 60 சதவீதம் குறைத்து வெறும் 4 வாகனங்களாக முதல்வர் ரேகா குப்தா கொண்டு வந்துள்ளார். தற்போது, மாற்றி அமைக்கப்பட்ட வாகன அணி வகுப்பு கட்டமைப்பில் 4 வாகனங்கள் மட்டுமே முதல்வர் பாதுகாப்புக்காக இடம் பெற்றுள்ளன.

அமைச்சர்கள், அதிகாரிகள் மெட்ரோவில் பயணம்

அவற்றில் 2 மின்சார வாகனங்கள் ஆகும். இது அதிகாரப்பூர்வ பயணத்தில் தூய்மையான மற்றும் நிலையான போக்குவரத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது. எரிபொருள் சேமிப்பு மற்றும் திறமையான நிர்வாகத்தை ஊக்குவிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு தேசிய தலைநகரில் மேரா பாரத் மேரா யோக் தான் ( என் இந்தியா, என் பங்களிப்பு) என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம், ஒவ்வொரு வாரத்திலும் திங்கள்கிழமை ” திங்கள் மெட்ரோவாக அனுசரிக்கப்படும் என்றும், அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மெட்ரோவில் பயணம் செய்வார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: “நீட் முதல் ஜேஇஇ வரை… தேர்வு வினாத்தாள் கசிவால் சீரழியும் கல்வி அமைப்பு!” – என்ன நடக்கிறது?

6 மாதங்களுக்கு புதிய வாகனங்கள் வாங்கப்படாது

மேலும், ஒவ்வொரு வாரமும் ஒரு வாகனம் இல்லாத தினத்தை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி, அடுத்த 6 மாதங்களுக்கு பெட்ரோல், டீசல் அல்லது மின்சார வாகனங்கள் புதிதாக வாங்கப்படாது என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது. ஊழியர்களுக்கான போக்குவரத்து படி 10 சதவீதம் உயர்த்தப்படும் எனவும், வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஓராண்டுக்கு டெல்லி அரசின் எந்த அமைச்சரோ அல்லது அதிகாரியோ அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள மாட்டார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

90 நாள்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள திட்டம்

மேலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 90 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதுடன், சேமிப்பை ஊக்குவிக்கவும், தேசத்தை கட்டி எழுப்புவதற்கு பங்களிக்கவும் பொது மக்களுக்கு உறுதிமொழி அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மின்சார பயன்பாட்டை குறைக்கும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள ஏசிகள் 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் அமைக்கப்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவையற்ற மின்சார விரயத்தை தடுப்பதற்காக அரசு அலுவலகங்களில் முதன்மை சுவிட்சுகள் பொருத்தப்பட உள்ளன.

மேலும் படிக்க: கேரளாவின் புதிய முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார் வி.டி. சதீசன்..

Follow Us