AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உயரத்தில் நின்றவுடன் கால்கள் நடுங்குகிறதா? அதிர்ச்சி ரகசியம்!

Standing at Great Heights: உயரமான இடங்களில் நிற்கும் போது கால்கள் நடுங்குவது வெறும் பயம் காரணமாக மட்டும் அல்ல; அது உடலின் பாதுகாப்பு செயல்பாடாகும். கண்கள், மூளை மற்றும் பாத நரம்புகள் ஒன்றாக செயல்பட்டு சமநிலையை காக்க முயற்சிக்கும் போது விசித்திரமான உணர்வுகள் உருவாகின்றன. இது மனித உடல் விழாமல் தற்காத்துக்கொள்ளும் இயற்கையான நரம்பியல் எதிர்வினையாக கருதப்படுகிறது.

Sivasankari Bose
Sivasankari Bose | Published: 14 May 2026 17:23 PM IST
பயம் மட்டுமே காரணமல்ல: உயரமான இடத்தில் நிற்கும் போது கால்கள் நடுங்குவதற்கு பயம் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது; இது உடல் தன்னைத் தற்காத்துக்கொள்ள மேற்கொள்ளும் ஒரு நரம்பியல் மாற்றமாகும். ஒரு பள்ளத்தின் அருகில் நிற்கும் போது நம் மூளை உடனடியாக 'அலர்ட்' மோடுக்கு மாறி, பாதங்களில் உள்ள உணர்வேற்பிகளின் கவனிக்கும் திறனைப் பலமடங்கு சட்டென்று உயர்த்தி விடுகிறது.

1 / 5
மூளையின் சமநிலை தந்திரம்: உடல் சமநிலையை நிலைநிறுத்த கண்கள், காதுகளின் உட்பகுதி மற்றும் தசை உணர்வுகள் ஆகியவை இணைந்து செயல்படுகின்றன; ஆனால் உயரத்தில் இருக்கும் போது கண்கள் பார்க்கும் காட்சிக்கும் கால்கள் உணரும் அழுத்தத்திற்கும் இடையே முரண்பாடு ஏற்படுகிறது. தூரத்தில் இருக்கும் பொருட்கள் அசையாமல் தெரிவதால் கண்கள் குழப்பமடையலாம், அப்போது மூளை கண்களை விட பாதங்களின் உணர்வுகளை அதிகம் நம்பத் தொடங்குவதால் இந்த மாற்றம் நிகழ்கிறது.

2 / 5
பாதங்களின் அதீத விழிப்புணர்வு: நமது பாதத்தின் அடிப்பகுதியில் மெர்க்கெல் செல்கள், மீஸ்னர் செல்கள் மற்றும் பாசினியன் செல்கள் போன்ற பல்வேறு நுட்பமான உணரிகள் உள்ளன, இவை தொடுதல் மற்றும் அதிர்வுகளைக் கண்டறிய உதவுகின்றன. உயரமான இடத்தின் விளிம்பில் ஒரு சிறிய தவறு நடந்தால் கூட ஆபத்து என்பதால், இந்த செல்கள் அனைத்தும் அந்தத் தருணத்தில் உச்சக்கட்ட விழிப்புணர்வுடன் செயல்படத் தொடங்குகின்றன.

3 / 5
புலன்களுக்கு இடையே ஏற்படும் குழப்பம்: கால்களில் இருக்கும் ஒவ்வொரு சிறிய அழுத்த மாற்றத்தையும் மூளை பெரிதுபடுத்தி காட்டுவதால், நம் உடல் ஒரு மில்லிமீட்டர் அசைந்தால் கூட அதை ஒரு பெரிய மாற்றமாக நம் நரம்புகள் உணரத் தொடங்குகின்றன. இந்தத் தீவிரமான தகவல் பரிமாற்றத்தினால் தான் சிலருக்குக் கால்களில் எறும்புகள் ஊர்வது போன்றும், சிலருக்குக் கால்கள் தரையோடு ஒட்டிக்கொண்டு நகர மறுப்பது போன்றும் விசித்திர உணர்வு தோன்றுகிறது.

4 / 5
தனிப்பட்ட உடல் எதிர்வினை: இந்த நரம்பியல் மாற்றம் உலகில் உள்ள பெரும்பாலான மனிதர்களுக்கு நடக்கும் ஒன்றுதான் என்றாலும், அனைவருடைய மூளையும் இதை ஒரே மாதிரியாகக் கையாளுவதில்லை என்பதால் சிலர் மட்டுமே இதை உணர்கிறார்கள். ஒருமுறை இந்த உணர்வை கவனித்துவிட்டாலே அடுத்தமுறை உயரத்திற்குச் செல்லும் போது கவனம் தானாகவே கால்களுக்குச் சென்றுவிடும், இது உண்மையில் உங்கள் உடல் உங்களை விழாமல் தடுத்துப் பாதுகாக்கும் ஒரு முயற்சியே ஆகும்.

5 / 5
Follow Us