2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் ரூ.40 ஆயிரம் போனஸ்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு!
CM Chandrababu Naidu : ஆந்திர மாநிலத்தில் மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக 2 குழந்தைக்கு மேல் பெற்றெடுக்கும் பெற்றோர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் சந்திரபாபு நாடு அறிவித்துள்ளார் .
ஆந்திர மாநிலத்தில் குறைந்து வரும் மக்கள் தொகையை சரி செய்வதற்காக அந்த மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2- ஆவது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு ரூ.20 ஆயிரம், 3- ஆவது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு ரூ.30 ஆயிரம், 4-ஆவது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு ரூ.40 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். ஸ்ரீ காகுளம் மாவட்டம், நர்சன்னபேட்டாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று பேசியிருந்தார். அப்போது, ஒரு கால கட்டத்தில் மக்கள் தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தேன். தற்போது, பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் ஏற்பட்டுள்ளது. இதற்காக முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளேன். அதில், 2 முதல் 3 குழந்தைகள் வரை பெரும் பெற்றோர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக அறிவித்தார்.
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் ஊக்கத்தொகை
2- ஆவது குழந்தை பிறப்பதற்கு ரூபாய் 25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் முந்தைய முன்மொழிவை தொடர்ந்து மீண்டும் புதிய அறிவிப்பு வந்துள்ளது. கடந்த மார்ச் 5- ஆம் தேதி இரண்டாவது குழந்தை பெரும் தம்பதிக்கு ரூபாய் 25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் தெரிவித்திருந்தார். இதே போல, மூன்றாவது குழந்தை மற்றும் அதற்கு மேலும் குழந்தை பெறும் குடும்பங்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட அரசு முடிவு செய்துள்ளதாக மாநில சுகாதார துறை அமைச்சர் சத்திய குமார் யாதவ் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: டெல்லியில் இனி எலக்ட்ரிக் ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி?.. புதிய எரிபொருள் கட்டுப்பாடுகளும் அமல்!!




பெற்றோருக்கு ஊக்கத்தொகை வழங்குவது ஏன்
சில தம்பதிகள் வருமானம் அதிகரிக்கும் போது ஒரே ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள தேர்வு செய்கிறார்கள். மற்றவர்கள் தங்களின் முதல் குழந்தை ஆண் குழந்தையாக இல்லாத பட்சத்தில் மட்டுமே இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொள்ள தேர்ந்தெடுக்கிறார்கள். இதன் காரணமாக மாநிலத்தின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. ஒரு பெண்ணுக்கு சராசரியாக 2.1 குழந்தைகள் என்ற கருவுறுதல் விகிதம் இருக்கும் நிலையில் மக்கள் தொகை நிலையாக இருக்கும்.
குழந்தைகள் சுமை அல்ல அது சொத்து
பல்வேறு நாடுகளில் குறைந்து வரும் மக்கள் தொகையும், வயதாகி வரும் சமூகங்களும் அவற்றின் பொருளாதாரங்களை எதிர்மறையாக பாதித்துள்ளது. இதனால், குழந்தைகளை சுமை என்று கூறும் கருத்தை சந்திரபாபு நாயுடு நிராகரித்ததுடன் குழந்தைகள் ஒரு சொத்து என்று குறிப்பிட்டார். குழந்தைகள் தேசத்தின் செல்வம், சுமையல்ல,” என்று கூறிய அவர், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை மையமாகக் கொண்ட முந்தைய அணுகுமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு மக்களை வலியுறுத்தினார்.
மேலும் படிக்க: நீட் தேர்வு வினாத்தாளை வெளியிட்ட ஆசிரியர் கைது – வினாத்தாள் கசிந்தது எப்படி?