AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் கிளாண்டர்ஸ் தொற்றால் குதிரை உயிரிழப்பு – கண்காணிப்பு தீவிரம்

சென்னையில் மக்கள் சவாரி செய்ய பயன்படுத்தப்பட்ட குதிரை ஒன்று கிளாண்டர்ஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை முழுவதும் உள்ள 140க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள கால்நடை பராமரிப்புத் துறை திட்டமிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குதிரையுடன் இருந்த அனைத்து குதிரைகளையும் தனிமைப்படுத்தவும் மேலும் இதுபற்றி தீவிரமாக கண்காணிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் கிளாண்டர்ஸ் தொற்றால் குதிரை உயிரிழப்பு – கண்காணிப்பு தீவிரம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 16 May 2026 19:03 PM IST

சென்னை, மே 16 : சென்னையில் மக்கள் சவாரி செய்ய பயன்படுத்தப்பட்ட குதிரை ஒன்று கிளாண்டர்ஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை முழுவதும் உள்ள 140க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள கால்நடை பராமரிப்புத் துறை திட்டமிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குதிரையுடன் இருந்த அனைத்து குதிரைகளையும் தனிமைப்படுத்தவும் மேலும் இதுபற்றி தீவிரமாக கண்காணிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் கிளாண்டர்ஸ் தொற்றால் குதிரை உயிரிழப்பு

குதிரைகள், குழுதைகளுக்கு இடையே பாக்டீரியாவால் ஏற்படும் கிளாண்டர்ஸ் தொற்று மனிதர்களுக்கும் பரவும் என்று கூறப்படுகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட குதிரைகளுடன் நேரடி தொடர்பு அல்லது குதிரைகளுடன் தொடர்புடைய பொருள்களில் இருந்தும் இந்த தொற்று மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பரவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது எளிதில் பரவும் கூடியதும் என்றும் இது மரணத்தை ஏர்படுத்தும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க :  திருப்பத்தூரில் நாய்க்கான உணவு சாப்பிட்டதால் சோகம்… சிறுமி மரணம்….!

இந்த நிலையில் சென்னையில் மக்கள் சவாரி செய்ய பயன்படுத்தப்பட்ட குதிரை ஒன்று கிளாண்டர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குதிரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை முழுவதும் வேறு ஏதேனும் குதிரைகளுக்கு இந்த தொற்று பாதிக்கப்பட்டுள்ளதா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சென்னை முழுவதும் உள்ள 140க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள கால்நடை பராமரிப்புத்துறை திட்டமிட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட குதிரைகளுடன் இருந்த மற்ற குதிரைகள் அனைத்தையும் கண்டறிந்து தனிபமைப்படுத்தவும் மாநிலம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கவும் கால்நடைத்துறை தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.  குதிரைகளை பராமரித்தவர்களையும் உடல் நல பரிதோசனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் குதிரைகளை பராமரிக்கும் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும். விலங்குகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டலா் உடனடியாக கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கால் நடைகள் தீவிர கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. மாவட்ட கால்நடை துறைக்கு இது தொடர்பாக எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : பிளஸ் 2 தேர்வில் கணித பாடத்தில் தோல்வி.. மாணவி எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் ஆழ்ந்த பெற்றோர்!

கிளாண்டர்ஸ் நோய் மனிதர்களுக்கும் பரவும் என்றும் இதனால் உயிரிழப்புகளும் ஏற்படும் என்பதால் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் குதிரைகள் பராமரிக்கும் இடங்களுக்கு அருகில் வசிப்பவர்கள்எ எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us