AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

PM Modi : இன்று 8.30 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்றவிருக்கும் பிரதமர் மோடி

 பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 18, 2026 இன்று 8.30 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தொகுதி மறுவரையறை, பெண்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசுவார் என கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் வெகு சில நாட்களே உள்ள நிலையில் இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

PM Modi : இன்று 8.30 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்றவிருக்கும் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Apr 2026 15:52 PM IST

பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 18, 2026 இன்று 8.30 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தொகுதி மறுவரையறை, பெண்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசுவார் என கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் வெகு சில நாட்களே உள்ள நிலையில் இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

நாட்டு மக்களுடன் உரையாற்றும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி மறுவரையறை 131வது அரசியலமைப்புத் திருத்த மசோதா நிறைவேறத் தவறியதைத் தொடர்ந்து, மோடியின் உரை குறித்த பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அமைச்சரவைக் கூட்டத்தின் போதே பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை விமர்சித்திருந்தார்.

இதையும் படிக்க : “தமிழ் மண், மொழி, கலாச்சாரத்தை ஆர்எஸ்எஸ், பாஜகவால் தொடக்கூட முடியாது”.. ராகுல் காந்தி கர்ஜனை!!

பிரதமரின் உரை குறித்த பதிவு

 

எனவே, அவர் மீண்டும் ஒருமுறை எதிர்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைப்பார் என கூறப்படுகிறது. மேலும், நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் முக்கிய மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்கத் தவறியது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய ஒரு விரிவான உரையை பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமித் ஷா ஆகியோர் ஏப்ரல் 18, 2026 அன்று தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோயம்புத்தூர் வருகை தரவுள்ளனர்.   கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில்  நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசவிருக்கிறார்.  இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு மாலை 4 மணிக்கு வந்தடைகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா மைதானத்தை சென்றடைகிறார்.

இதையும் படிக்க  : கோவையில் மையமிடும் 3 துருவங்கள்.. மாநகரில் போக்குவரத்து மாற்றம்.. போலீசார் வெளியிட்ட அறிவிப்பு!

இதனையடுத்து சுமார் 5 மணியளவில் தொடங்கும் இந்த பொதுக்கூட்டமானது ஒரு மணி நேரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி பொது கூட்டத்தை முடித்துக் கொண்டு மீண்டும் சாலை மார்க்கமாக கோவை விமான நிலையத்தை சென்றடைகிறார். அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். இதற்காக கோவை நகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Follow Us