பால் குடிக்காமல் அழுத பச்சிளம் குழந்தை.. கொதிக்கும் தண்ணீரில் போட்டு கொலை செய்த தாய்.. கொடூர சம்பவம்!
Mother Killed New Born Child | பெங்களூருவில் பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை பால் குடிக்காமல் அழுதுக்கொண்டே இருந்த நிலையில், ஆத்திரமடைந்த தாய் அதனை கொதிக்கும் தண்ணீரில் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவம் அந்த பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு, ஜூலை 10 : பெங்களூருவில் (Bengaluru) பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை பால் குடிக்காமல் அழுதுக்கொண்டே இருந்த நிலையில், ஆத்திரமடைந்த தாய் கொதிக்கும் தண்ணீரில் போட்டு குழந்தையை கொலை செய்துள்ளார். குறை பிரசவத்தில் பிறந்த அந்த குழந்தை அவ்வப்போது பால் குடிக்காமல் அழுது வந்த நிலையில், தனது குழந்தைக்கு மனநலம் சரி இருக்காது என நினைத்து அந்த பெண், இத்தகைய கொடூர செயலை செய்துள்ளார். இந்த நிலையில், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தாய் கொலை செய்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பால் குடிக்காமல் அழுத குழந்தை – கொதிக்கும் நீரில் போட்டு கொலை செய்த பெண்
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள நலமங்களா பகுதியை சேர்ந்தவர் ராதாமணி. இவருக்கு 25 வயதாகும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 38 நாட்களுக்கு முன்னதாக பிறந்த அந்த குழந்தை, குறை பிரசவத்தில் பிறந்துள்ளது. இதன் காரணமாக குழந்தை அடிக்கடி பால் குடிக்காமல் அழுதுக்கொண்டு இருந்துள்ளது. ராதாமணியின் கணவரோ மது பழக்கத்திற்கு அடிமையாக உள்ள நிலையில் அவர் அடிக்கடி குடித்துவிட்டு ராதாமணியையும் குழந்தையையும் கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளார். இது ராதாமணிக்கு மேலும் மன உளைச்சலை அதிகரித்துள்ளது.
குழந்தைக்கு மனநலம் சரி இருக்காது என நினைத்து கொடூர செயலை செய்த தாய்
இந்த நிலையில் சம்பவத்தன்று ராதாமணி தனது தாய் வீட்டில் தங்கியுள்ளார். அங்கு அவரது தாய் ரேணுகா மற்றும் மாற்று திறனாளியான அவரது மூத்த சகோதரர் ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது வழக்கம் போல குழந்தை பால் குடிக்காமல் அழத் தொடங்கியுள்ளது. இதனால் குழந்தைக்கு மனநலம் சரி இருக்காது என நினைத்த அவர், கொதிக்கும் தண்ணீரில் போட்டு பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் வெளியே தெரியவரவே அது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.




குழந்தை பெற்ற தாய்மார்கள் Postpartum Depression-ஐ அனுபவிக்கும் நிலையில், இந்த பெண் மன அழுத்தம் காரணமாக தனது பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.