Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மனைவி மற்றும் மாமியாரை நிர்வாண பூஜை செய்ய வற்புறுத்திய கணவர்.. அடுத்து செய்த அதிர்ச்சி செயல்!

Mumbai Husband Arrested for Superstitious Belief | மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மாமியாரை நிர்வாண பூஜை செய்ய சொல்லி, அதனை புகைப்படம் எடுத்து மனைவியின் குடும்ப உறவினர்களுக்கு அனுப்பியதால், புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார், இந்த விவகாரம் குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி மற்றும் மாமியாரை நிர்வாண பூஜை செய்ய வற்புறுத்திய கணவர்.. அடுத்து செய்த அதிர்ச்சி செயல்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 06 Jul 2025 07:17 AM

மும்பை, ஜூலை 06 : மும்பையில் (Mumbai) மனைவி மற்றும் மாமியாரை நிர்வாணமாக பூஜை செய்ய கட்டாயப்படுத்திய கணவன், அதனை புகைப்படம் எடுத்து உறவினர்களுக்கு அனுப்பியதால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மூட நம்பிக்கையில் மூழ்கிபோன அந்த நபர், மனைவியின் தம்பிக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்த நிலையில், இத்தகைய பூஜைகள் செய்தால் உடனடியாக திருமணம் நடக்கும் என கூறி, இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அவரை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி மற்றும் மாமியாரை நிர்வாண பூஜை செய்ய வற்புறுத்திய கணவர்

மராட்டிய மாநிலம் நவிமும்பை பகுதியை சேர்ந்தவர் 30 வயது நபர். இவருக்கு மாந்திரீகத்தில் அதிக நம்பிக்கையும் ஈடுபாடும் உள்ளது. இதன் காரணமாக பல மாந்திரீக செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் தனது மனைவியின் சகோதரருக்கு நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருந்து வந்த நிலையில், திருமண தடை நீங்குவதற்காக சில பூஜைகள் செய்ய வேண்டும் என்று அவர் தனது மனைவியிடம் கூறியுள்ளார். அதாவது தனது மனைவியும், மாமியாரும் நிர்வாணமாக பூஜை செய்ய வேண்டும் என்று அந்த நபர் வற்புறுத்தி உள்ளார்.

நிர்வாண புகைப்படங்களை மனைவியின் குடும்பத்திற்கு அனுப்பிய கணவர்

கணவனின் பேச்சை கேட்ட அந்த பெண், தனது சகோதரருக்கு திருமண தடை நீங்குவதற்காக தனது தாயுடன் நிர்வாணமாக பூஜை செய்துள்ளார். இந்த நிலையில், அந்த நபர் தனது மனைவி மற்றும் மாமியார் நிர்வாணமாக பூஜை செய்த புகைப்படங்களை மனைவியின் குடும்பத்தில் சிலருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த தகவல் அறிந்து அவரது மனைவி மற்றும் மாமியார் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.

கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளும் போலீஸ்

இதனை தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் இந்த விவகாரம் குறித்து தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார். பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது கணவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.