Meghalaya Murder: தந்தை கண்முன்னே கழுத்தறுத்து கொல்லப்பட்ட பெண்.. மார்க்கெட்டில் இளைஞர் செய்த வெறிச்செயல்!
Meghalaya Man Kills Girlfriend: மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் 24 வயது இளம்பெண், தனது முன்னாள் காதலனால் தந்தையின் கண்முன்னே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். சந்தையில் நடந்த இந்தச் சம்பவத்தின் பின்னர், குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. காதல் பிரச்சனைதான் கொலைக்குக் காரணம் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேகாலயா, ஜூலை 1: மேகாலயாவின் (Meghalaya) கிழக்கு மேற்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் 24 வயதான இளம்பெண் தனது தந்தையின் கண் முன்னே குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று அதாவது 2025 ஜுன் 30ம் தேதி மாலை சுமார் 5.30 மணியளவில் நடந்துள்ளது. அந்த நபர் தனது காதலியின் தந்தையின் கண் முன்னே கழுத்தை அறுத்து கொலை (Meghalaya Murder) செய்ததாகக் கூறப்படுகிறது. மைராங் பின்டெங்குமியோங் கிராமத்தில் உள்ள ஒரு சந்தையில் தங்களது வயல்களில் இருந்து விளைந்த பொருட்களை விற்க அந்தப் பெண் தனது தந்தையுடன் சென்றிருந்தபோது இந்த கொடூர சம்பவம் நடந்தது. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
யார் இந்த பெண்..? என்ன நடந்தது..?
உயிரிழந்த பெண் மவ்காப் கிராமத்தில் வசித்து வந்த ஃபிர்னாலின் கர்சிந்த்யு என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் தனது காதலியையும், அவரது தந்தையையும் சந்தையில் சந்தித்து கொண்டனர். தொடர்ந்து, உரையாடலின்போது, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென்று அந்த நபர் தனது காதலியின் கழுத்தை அறுத்தார். இதன்பிறகு, சாலை முழுவதும் இரத்தம் ஆறாக ஓடியது என்று தெரிவித்தனர்.




இந்த சம்பவத்திற்கு பிறகு சந்தையில் இருந்த மக்கள், ஃபெர்னாலின் உடனடியாக மைராங் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் மருத்துவர்கள் சோதித்த பிறகு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தப்பிக்க முயன்றபோது உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
காவல்துறையினர் விசாரணை:
STORY | Man kills girlfriend by slitting her throat, held in Meghalaya
READ: https://t.co/cyJVWJWyUX pic.twitter.com/0DQt4cvas3
— Press Trust of India (@PTI_News) July 1, 2025
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “கொலையாளியின் நோக்கம் தனிப்பட்ட தகராறால் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணும், கொலை செய்த நபரும் காதலித்து வந்துள்ளனர். சமீப நாட்களுக்கு முன்பு, அந்த பெண் அந்த நபருடனான உறவை முறித்துக் கொண்டுள்ளார். அதனால்தான் அவர் கோபத்தில்அந்தப் பெண்ணைப் பழிவாங்கத் திட்டமிட்ட அந்த நபர், அவளது தந்தையின் கண் முன்னே அவளைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இருப்பினும், நாங்கள் ஒவ்வொரு கோணத்திலும் விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.