Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மருத்துவமனையில் பகீர்… இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற காதலன்.. நடந்தது என்ன?

Madhya Pradesh Murder : மத்திய பிரதேச மாநிலத்தில் இளம்பெண்ணை, அவரது காதலன் கொடூரமாக கொலை செய்துள்ளார். மருத்துவமனையில் இருந்த இளம்பெண்ணை, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனை அங்கிருந்த மருத்துவர்கள், பணியாளர்கள் பலரும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். இதனை தடுக்காமல் அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் பகீர்… இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற காதலன்.. நடந்தது என்ன?
கொலை செய்யப்பட்ட பெண்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 01 Jul 2025 13:03 PM

மத்திய பிரதேசம்,  ஜூலை 01 : மத்திய பிரதேச மாநிலத்தில் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து இளைஞர் கொலை (Madhya Pradesh Murder) செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் வளாகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகள் பலரது கண்முன்னே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இளம்பெண்ணை கொலை செய்த அந்த நபரை யாரும் தடுக்காமல் இருந்துள்ளனர். நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொலை, வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. நாட்டில் தினமும் நடக்கக் கூடிய கொலை சம்பவங்கள்  அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்களை அவர்களுக்கு தெரிந்த நபர்களால் கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற காதலன்

இந்த சூழலில், மத்திய பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, 19 வயதான இளம்பெண்ணை இளைஞர் மருத்துவமனையில் கொடூரமாக கொலை செய்துள்ளார். நர்சிங்பூர் அரசு மாவட்ட மருத்துவமனைக்குள், சந்தியா சவுத்ரி என்ற 19 வயது இளம்பெண்ணை, இளைஞர் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் 2025 ஜூன் 27ஆம் தேதி நடந்துள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் பயிற்சி திட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக மருத்துவமனைக்கு இளம்பெண் சென்றிருக்கிறார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் மருத்துவமனைக்குள், இளம்பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளார்.

அவரது மடியில் இளம்பெண்ணை வைத்து மார்பு மற்றும் கழுத்தில் கொடூரமாக கொலை செய்துள்ளார்.  இந்த சம்பவம் திடீரென நடந்ததை அடுத்து, அங்கிருந்தவர்கள் உறைந்து நின்றுள்ளனர். பின்னர், அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். கத்தியால் தன்னை தானே கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்றார். இருப்பினும், அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

மருத்துவமனையில் நடந்த சம்பவம்

இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்,  ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம்பெண்ணை மீட்டுள்ளனர்.  மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர். மேலும், கொலை செய்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

கொலை செய்த நபர் அபிஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, இளம்பெண் மற்றும் அபிஷேக் இருவரும் இரண்டு வருடங்கள் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே தொடர்ந்த பிரச்னை ஏற்பட்டு வந்ததாகவும், இதனால், அந்த பெண்ணை அபிஷேக்கிடம் பேசுவதை நிறுத்தியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரத்தில், இளம்பெண்ணை கொன்றதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, இளைஞர் அபிஷேக்கை கைது செய்துள்ளனர்.  இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் இளம்பெண்ணை கொன்றது தெரியவந்துள்ளது.  இந்த கொலை சம்பவம் தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.