AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குப்பை லாரியில் பெண் சடலம்.. லிவ் இன் பார்ட்னர் செய்த கொடூரம்.. பெங்களூருவில் அதிர்ச்சி

Bengaluru Murder : பெங்களூரூவில் லின் இன் உறவில் இருந்த பெண்ணை, அவரது காதலன் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், கொலை செய்துவிட்டு பெண்ணின் உடலை குப்பை லாரியில் வீசியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குப்பை லாரியில் பெண் சடலம்.. லிவ் இன் பார்ட்னர் செய்த கொடூரம்.. பெங்களூருவில் அதிர்ச்சி
கொலை செய்த நபர்Image Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 30 Jun 2025 16:15 PM IST

பெங்களூரு, ஜூன் 30 : கர்நாடக மாநிலம் பெங்களூவில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் (Bengaluru Murder) பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லின் இன் உறவில் இருந்த இளைஞர், அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து சடலத்தை குப்பை லாரியில் வீசியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. 2025 ஜூன் 29ஆம் தேதி பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை சேகரித்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த குப்பை லாரியில் துர்நாற்றம் வீசியுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து, சந்தேகம் அடைந்த மாநகராட்சி ஊழியர்கள் லாரியின் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, ஒரு பெண்ணின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு சாக்கு மூட்டையில் பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்டு சாக்கு மூட்டியில் பெண் சடலமாக கிடந்துள்ளார்.

குப்பை லாரியில் பெண் சடலம்

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி ஊழியர்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், உயிரிழந்த பெண் 40 வயதான ஆஷா என்று தெரியவந்தது. இவர் அசாமைச் சேர்ந்த 33 வயதான முகமது ஷம்சுதீன் என்பவருடன் லிவ் இன் உறவில் இருந்துள்ளார்.

இவர்க்ள இரண்டு பேரும் ஓன்றரை வருடங்களாக ஹுலிமாவுவில் ஒரு வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். ஆஷாவின் கணவர் உயிரிழந்துள்ளார். அஷா மற்றும் முகமதுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முகமது ஷம்சுதீனும் திருமணமானவர்.

லிவ் இன் பார்ட்னர் செய்த கொடூரம்

ஆனால் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் அசாமில் வசிக்கின்றனர். வேலைக்காக பெங்களூருவில் வசித்து வருகிறார். ஆஷா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஆஷாவுக்கும் முகமது ஷம்சுதீனுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனால், இவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளதாக தெரிகிறது- இதனை அடுத்து, முகமது ஷம்சுதீன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

கொலை பிறகு, ஆஷாவின் உடலை பைக்கில் எடுத்துக் கொண்டு குப்பை லாரியில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது. இதன் மூலம், முகமதுவை போலீசார் கைது செய்துள்ளனர்.  கைதான முகமதுவிடம்  போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொலை, கொள்ளை, வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், சட்டங்களை கடுமையாக்கி உள்ளது. இருப்பினும்,  இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us