Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வரதட்சணை கொடுமை.. திருமணமான 4வது நாளில் பெண் எடுத்த விபரீத முடிவு.. திருவள்ளூரில் அதிர்ச்சி

Tiruvallur Dowry Harassment : திருவள்ளூர்  மாவட்டம் பொன்னேரியில் பெண் ஒருவர் திருமணமான 4வது நாளில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 5 சவரன் நகை கொடுப்பதாக கூறி 4 சவரன் கொடுத்ததால் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அந்த பெண் விபரீத முடிவை எடுத்துள்ளார்.

வரதட்சணை கொடுமை.. திருமணமான 4வது நாளில் பெண் எடுத்த விபரீத முடிவு.. திருவள்ளூரில் அதிர்ச்சி
தற்கொலை செய்து கொண்ட பெண்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 01 Jul 2025 13:53 PM

திருவள்ளூர், ஜூலை 01 : திருவள்ளூர்  மாவட்டம் பொன்னேரியில் பெண் ஒருவர் திருமணமான 4வது நாளான இன்று (ஜூலை 1) தற்கொலை (Tiruvallur Dowry Harassment) செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 சவரன் நகை கொடுப்பதாக கூறி 4 சவரன் கொடுத்ததால், பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அப்பெண்ணின் கணவர் பன்னீர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் காவல்துறை விசாரிக்கிறது. நேற்று அவிநாசியில்  பெண் ஒருவர் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார்.  இந்த நிலையில், மற்றொரு அதிர்ச்சி  சம்பவம் நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் லோகேஸ்வரி. இவருக்கு வயது 24. இவருக்கு முஸ்லீம் நகரைச் சேர்ந்த பன்னீர் என்பவருடன் 2025 ஜூன் 27ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது.

திருமணமான 4வது நாளில் பெண் தற்கொலை

திருமணமானதில் இருந்தே கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. கூடுதல் வரதட்சணை கோரி சித்ரவதை செய்து வந்துள்ளதாக தெரிகிறது.இந்த நிலையில், கணவருடன் 2025 ஜூன் 30ஆம் தேதியான நேற்று தாய் வீட்டிற்கு லோகேஸ்வரி சென்றிருக்கிறார்.

அப்போது, இரவில் லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதனை அறிந்த பெண்ணின் தாய் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரதட்சணை கொடுமையால் பெண் எடுத்த முடிவு

திருமணத்திற்கு வரதட்சணையாக பன்னீர் குடும்பத்தினர் 5 சவரன் பெண் வீட்டாரிடம் கேட்டுள்ளதாகவும், ஆனால், பெண்ணின் குடும்பத்தினர் 4 சவரன் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், பெண்ணிடம் நகைகள், இருசக்கர வாகனம், ஏசி போன்றவற்றை கேட்டு சித்ரவதை செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாகவும் பெண்ணின் குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து, போலீசார் பன்னீர் மற்றும்  அவரது தந்தை, தாயிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  2025 ஜுன் 30ஆம் தேதியான நேற்று திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது மாநிலத்தை உலுக்கியது. திருமணமான 78 நாட்களில் ரிதன்யா என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

2025 ஏப்ரல் மாதம் கவின் குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. அப்போது, வரதட்சணையாக 800 கிராம் தங்கம், ஒரு வால்வோ காரை பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். இருப்பினும், கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் ரிதன்யாவை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்த நிலையில், மன உளைச்சலில் இருந்த பெண், தனது தந்தை ஆடியோ மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது சம்பந்தமாக, கணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.