ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொலை செய்து தீ வைத்து எரித்த கிராமத்தினர்.. பீகாரில் பகீர் சம்பவம்!
Villagers killed 5 of Family Members | பீகாரில் ஒரு கிராமத்தில் கிராம மக்கள் இணைந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொடூரமாக கொலை செய்து அவர்களது வீட்டிற்குள்ளே வைத்து எரித்துள்ளனர். அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாந்திரீக செயல்களில் ஈடுபடுவதாக நம்பிய கிராமத்தினர் இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர்.

பீகார், ஜூலை 08 : பீகாரில் (Bihar) உள்ள ஒரு கிராமத்தில், கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு குடும்பத்தை அடித்து கொலை செய்து, வீட்டுடன் வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த குடும்பத்தினர் கிராமத்திற்கு எதிராக மாந்திரீகம் செய்வதாக நம்பிய கிராம மக்கள் அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் வகையில், இந்த கொடூர சம்பவத்தை செய்துள்ளனர். இந்த நிலையில், பீகாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் வீட்டுடன் வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அடித்து கொலை செய்த கிராமத்தினர்
பீகார் மாநிலம் பூரணியா மாவட்டம் டகோமா கிராமத்தை சேர்ந்தவர் பாபு லால். இவர் தனது குடும்ப உறுப்பினர்கள் சீதா தேவி, மன்ஜத் ஓரன், ராணியா தேவி, டபோ மோஸ்மட் மற்றும் அவரது குழந்தை என அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பாபு லால் மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து மாந்திரீக வேலைகளில் ஈடுபடுவதாக கிராமத்தில் இருந்தவர்கள் நம்பி உள்ளனர்.
குறிப்பாக பாபு லால் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்யும் மாந்திரீக செயல்களால் தான் கிராமத்தில் அசம்பாவிதங்கள் நடப்பதாகவும் அவர்கள் நம்பியுள்ளனர். இதன் காரணமாக பாபு லால் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாடம் கற்று கொடுக்கும் வகையில் கிராமத்தினர் கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர்.
5 பேரை அடித்து கொலை செய்து வீட்டுடன் வைத்து எரித்த கிராம் மக்கள்
இந்த நிலையில் நேற்று (ஜூலை 08, 2025) பாபு லாலின் வீட்டிற்கு சென்ற கிராமத்தினர் பாபு லால் மற்றும் அவரது குடும்பத்தினரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். பிறர் கொலை செய்யப்பட்ட அந்த ஐந்து பேரின் உடல்களையும் அதே வீட்டில் வைத்து கிராமத்தினர் எதிர்த்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் ஒரே ஒரு குழந்தை மட்டும் உயிர் தப்பி உள்ளது. ஐந்து பேரும் பரிதாபமாக உயிரோடு இருந்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் அறிந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அது தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தியுள்ள போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.