Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காதல் தோல்வி.. இன்ஸ்டாகிராம் லைவில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட இளைஞர்!

Young Man Killed Himself in Instagram Live | மத்திய பிரதேசத்தில் காதல் தோல்வியால் மனமுடைந்த இளைஞர் இன்ஸ்டாகிராம் லைவில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

காதல் தோல்வி.. இன்ஸ்டாகிராம் லைவில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட இளைஞர்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 05 Jul 2025 08:57 AM

மத்திய பிரதேசம், ஜூலை 05 : மத்திய பிரதேசத்தில் (Madhya Pradesh) இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் லைவில் (Instagram Live) தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் தோல்வி காரணமாக இளைஞர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் லைவில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராம் லைவில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட இளைஞர்

மத்திய பிரதேச மாநிலம், ஷாபூர் பகுதி சேர்ந்த இளைஞர் ராகுல். 20 வயதான இவர் ஷடர்பூர் பகுதியை சேர்ந்த பெண் யூடியூபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் காதலர்களிடையே மனக்கசப்பு எழுந்த நிலையில் அந்தப் பெண் ராகுல் உடனான காதலை முறித்துக் கொண்டுள்ளார். இதனால் மனமுடைந்த ராகுல், இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முன்னதாக இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய அவர், இது எனது கடைசி வீடியோ. எனக்கு வாழ விருப்பமில்லை. நான் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன். வாழ்க்கையில் யாரையும் காதலிக்காதீர்கள் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் லைவ் ஓடிக் கொண்டிருந்தபோதே அவர் தூக்கிட்டு தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்.

வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை

இன்ஸ்டாகிராமில் ராகுலின் லைவை பார்த்து பதறிப்போன அவரது நண்பர்கள் உடனடியாக அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ராகுல் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனை கண்டு அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், நண்பர்கள் மற்றும் அந்த பகுதி  பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ராகுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் தோல்வியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இளைஞரின் இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.