Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

லிவ் இன் காதலியை அடித்து கொலை செய்த காதலன்.. சிறையில் மாரடைப்பால் பலி!

Man Killed Live In Partner and Dies of Heart Attack | உத்தர பிரதேசத்தில் 20 வயது இளம் பெண்ணுடன் லிவ் இன் உறவில் இருந்த இளைஞர் அந்த பெண்ணை கொலை செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் மாரடைப்பால் பலியனார்.

லிவ் இன் காதலியை அடித்து கொலை செய்த காதலன்.. சிறையில் மாரடைப்பால் பலி!
உயிரிழந்த காதல் ஜோடி
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 Dec 2025 07:25 AM IST

காந்தி நகர், டிசம்பர் 02 : உத்தர பிரதேசத்தை (UP – Uttar Pradesh) சேர்ந்தவர் 25 வயதான கமல்சிங். இவர் குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு தன்னுடன் பணியாற்றிய புஷ்பதேவி என்ற 20 வயது இளம் பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு இடையேயான அந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில், ஒன்றாக வசிக்க திட்டமிட்டிருந்த அவர்கள் கடந்த மூன்று மாதங்களாக லிவ் இன் உறவில் இருந்து வந்துள்ளனர்.

காதலியை அடித்து கொலை செய்த காதலன்

இருவரும் லிவ் இன் உறவில் இருந்து வந்த நிலையில், நவம்பர் 29, 2025 அன்று இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கமல்சிங் தனது காதலியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், மயங்கி கீழே விழுந்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : காதலனை கொலை செய்த குடும்பம்.. இறுதி சடங்கில் காதலனை திருமணம் செய்துக்கொண்ட இளம் பெண்!

சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மாரடைப்பால் உயிரிழந்த காதலன்

இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், காதலியை அடித்து கொலை செய்ததன் காரணமாக கமல்சிங் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சிறையில் இருந்த அவர் நேற்று (டிசம்பர் 01, 2025) மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க : ஐயப்ப பக்தர்களை குறி வைத்து நடக்கும் மோசடி.. கேரளா போலீசார் எச்சரிக்கை!

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அது தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லிவ் இன் காதலியை அடித்து கொலை செய்த காதலன், தானும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.