AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விஜய் ஆண்டனியின் அடுத்தப் படத்தின் கதை எப்படி இருக்கும் தெரியுமா? வைரலாகும் தகவல்

Vijay Antonys New Movie Update Here | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய் ஆண்டனியின் அடுத்தப் படத்தின் கதை எப்படி இருக்கும் தெரியுமா? வைரலாகும் தகவல்
விஜய் ஆண்டனிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Nov 2026 13:47 PM IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல வெற்றிகளை பதிவு செய்த விஜய் ஆண்டனி (Vijay Antony) தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக தொடர்ந்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் உள்ள ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வந்த விஜய் ஆண்டனி. தொடர்ந்து இசையமைப்பாளராக உச்சத்தில் இருக்கும் போது தமிழ் சினிமாவில் நாயகனாக படங்களில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் அப்பா குட்டி. அப்பா மகள் பாசத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாகவும், தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

விஜய் ஆண்டனியின் அடுத்தப் படத்தின் கதை எப்படி இருக்கும் தெரியுமா?

அதன்படி சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, அயோத்தி படத்தின் இயக்குனர் மந்திர மூர்த்தியுடன் விஜய் ஆண்டனி இணையும் அடுத்த படம், மிகச் சிறந்த உணர்ச்சிகரமான கதையைக் கொண்டிருப்பதாகவும், திரையரங்குகளில் நிச்சயம் வெற்றி பெறும் படைப்பாக அமையும் என்றும் கூறப்படுகிறது. மேலும், கோடியில் ஒருவன் படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், பிச்சைக்காரன் 3 படத்திலும் விஜய் ஆண்டனி பணியாற்றத் தயாராகி வருகிறார். இது விஜய் ஆண்டனியின் திரைப்பயணத்திலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக அமையவுள்ளது. இப்படத்தை 2027-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஆயுத பூஜை பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Also Read… மணிரத்னத்தின் இஞ்சி வெல்லம் படத்தின் கதை இதுதானா? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் யார் வீட்டார் உள்ளே வரும்போது பயந்தீர்கள்… போட்டியாளர்கள் ஓபன் டாக்!

Follow Us