AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தொகுதி மறுவரையறை மசோதா.. “தண்டனையா, வெகுமதியா?”.. திமுக முடிவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்!!

Former DMK Minister Mano Thangaraj Slams Party Stand: தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் திமுக ஆதரவு அளித்த முடிவுக்கு முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தமிழ்நாட்டிற்குத் தண்டனையா அல்லது வெகுமதியா எனக் கேள்வி எழுப்பிய அவர், 50 சதவீத உயர்வு சமநீதிக்கான தீர்வல்ல எனவும், சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதா.. “தண்டனையா, வெகுமதியா?”.. திமுக முடிவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்!!
மனோ தங்கராஜ்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 29 Nov 2026 13:13 PM IST

சென்னை, நவ.29: தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவுக்கு ஆதரவு அளிக்கப்படும் எனத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக, திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்தத் தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் தண்டனையா அல்லது வெகுமதியா எனவும், இது ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான வெள்ளோட்டமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வெறும் 50 சதவீதத் தொகுதி உயர்வு என்பது சமநீதிக்கான தீர்வல்ல எனக் குறிப்பிட்ட அவர், தொகுதி மறுவரையறை என்பது வெறும் மக்கள் தொகை அடிப்படையிலான கணக்கீடாக மட்டுமே இல்லாமல் கூட்டாட்சித் தத்துவம், மாநில உரிமைகள், நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் குரல் வலிமை, சிறுபான்மை மற்றும் விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அணுகப்பட வேண்டிய முக்கியமான பிரச்சனை எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: தொகுதி மறுசீரமைப்பு மசோதா.. “முடிவில் மாற்றமில்லை.. எட்டப்பன் அல்ல கட்டபொம்மன்”.. ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!!

மக்கள் தொகை கட்டுப்பாடும் 50% கணக்கீடும்:

மக்கள் தொகைக் கணக்கெடுப்பைச் சிறப்பாகக் கையாண்டு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு இது அநீதி அளிக்கப்படுவதாக மனோ தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார். விகிதாச்சாரத்தின் அடிப்படையில் 50 சதவீதம் என்றால் உத்தரப் பிரதேசத்திற்கு 40 எம்பிக்களும், தமிழ்நாட்டிற்கு 19 அல்லது 20 எம்பிக்களுமே கூடுதலாக வருவார்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஏற்கனவே அதிக எம்பிக்கள் உள்ள நிலையில் மீண்டும் கூடுதல் எண்ணிக்கை உருவாகும் சூழல் ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது எனவும், இதனைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பது கண்ணைத் திறந்து பார்த்துக்கொண்டே குழியில் விழுவதற்குச் சமம் எனவும் கடுமையான சொல்லாடல்களைப் பயன்படுத்தி விமர்சித்துள்ளார்.

சிறுபான்மை பிரதிநிதித்துவம் குறித்த எச்சரிக்கை:

தொகுதி மறுவரையறையில் எல்லைகளை மாற்றி நிர்ணயிக்கும் போது சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் இல்லாமலே போகும் சூழல் உருவாகும் எனவும், குறிப்பாகக் கிறிஸ்தவ மக்களையும் இது பாதிக்கும் எனவும் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள பாஜக உறுப்பினர்கள் பட்டியலில் ஒரு கிறிஸ்தவரோ அல்லது இஸ்லாமியரோ இல்லாத சூழல் உள்ளதையும் சுட்டிக்காட்டிய அவர், தென்மாநிலங்களின் தேவை இல்லாமல் போவதற்கும், இங்கிருந்து பிரதமர் உருவாகும் வாய்ப்பு இல்லாமல் போவதற்கும் இது வழிவகுக்கும் எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: தொகுதி மறுவரையறை.. காங்கிரஸ் எடுத்த திடீர் முடிவு.. ஸ்டாலினை சந்திக்க சென்னை வரும் சோனியா, ராகுல், கார்கே!!

கட்சியில் ஒதுங்கியிருந்த சூழலும் தற்போதைய எதிர்ப்பும்:

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாமல் அவர் நின்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், சமீப காலமாகக் கட்சி நிகழ்ச்சிகளில் பெரிய அளவில் பங்கேற்காமல் மனோ தங்கராஜ் ஒதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, திமுக முக்கியத் தலைவர்கள் ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துத் தங்களது நிலைப்பாட்டைத் தெரிவித்துவிட்ட சூழலில், முன்னாள் அமைச்சரான மனோ தங்கராஜ் திமுகவின் முடிவுக்கு எதிராக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Follow Us