AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருப்பரங்குன்றம்: மலை உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே பொதுமக்கள் தீபமேற்ற அனுமதி..

Thiruparankundram Uchi Pillaiyar Temple: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில் மட்டும் இன்று முதல் டிசம்பர் 15 வரை 17 நாட்களுக்கு, காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொதுமக்கள் தீபம் ஏற்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர். மத்திய பாதுகாப்புப் படையினர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அமைதியாக வழிபட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம்:  மலை உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே பொதுமக்கள் தீபமேற்ற அனுமதி..
திருப்பரங்குன்றம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 29 Nov 2026 10:18 AM IST

மதுரை, நவ.29: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நேற்று தீபம் ஏற்றப்பட்ட நிலையில், தற்போது உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில் மட்டும் இன்று முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை என 17 நாட்களுக்குப் பொதுமக்கள் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி ஓய்வு பெற்ற நீதிபதிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நேற்றைய தினம் தீபம் ஏற்றப்பட்ட சூழலில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் தற்போதைய நிலைவரம் குறித்துப் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : வெற்றிவேல் முருகனுக்கு… திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது! – விண்ணை முட்டிய பக்தர்கள் கோஷம்!

ஓய்வு பெற்ற நீதிபதிகள் மேற்பார்வையில் நிகழ்வு:

உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் நிர்வாகப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோரின் மேற்பார்வையில் நேற்று தீபம் ஏற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மலை உச்சியில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பக்தர்களின் வழிபாடு மற்றும் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகளின் உத்தரவின் பெயரில் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில் மட்டும் பொதுமக்கள் தீபம் ஏற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

17 நாட்கள் அனுமதி மற்றும் 100 ஆண்டு மரபு:

இன்று முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை, அதாவது இன்றிலிருந்து 17 நாட்களுக்குத் தினமும் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொதுமக்கள் அனைவரும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 100 ஆண்டுகளுக்கு மேலாகத் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில் மட்டும் பொதுமக்கள் தற்போது சென்று வழிபடுவதற்குத் திருக்கோயில் நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால அளவு மற்றும் நேர வரையறைக்குள் பக்தர்கள் வழிபாடுகளை மேற்கொள்ள இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் மலையில் 50 பேர்களுக்கு மட்டுமே அனுமதி – நீதிபதிகள் அறிவிப்பு

மத்திய பாதுகாப்புப் படையினர் வழிகாட்டுதல்:

பக்தர்களின் பாதுகாப்பையும் சட்டம்–ஒழுங்கையும் நிலைநிறுத்தும் வகையில், மத்திய பாதுகாப்புப் படையினர் வழங்கும் வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அமைதியான முறையில் தீபம் ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருக்கோயில் நிர்வாகப் பொறுப்பாளர்களாகச் செயல்படும் ஓய்வு பெற்ற நீதிபதிகள், பொதுமக்கள் அனைவரும் சட்டம்–ஒழுங்கைப் பேணுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் தங்களது அறிவிப்பில் முன்வைத்துள்ளனர்.

Follow Us