AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெண்கள் சுயதொழில் தொடங்க சிங்கப்பெண் திட்டத்தில் கடன்.. முழு விவரம் இதோ!

Singapen Loan Scheme | பெண்களின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காக பல வகையான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் சிங்கப்பெண் கடன் திட்டம். இந்த திட்டத்தில் பெண்கள் சுயதொழில் செய்ய கடன் பெறலாம் என அமைச்சர் கூறியுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெண்கள் சுயதொழில் தொடங்க சிங்கப்பெண் திட்டத்தில் கடன்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Nov 2026 10:15 AM IST

தமிழகத்தில் (Tamil Nadu) கூட்டுறவுத்துறை மூலம் பெண்களின் கனவுகளை நிஜமாக்கும் வகையில், அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் சிங்கப்பெண் கடன் திட்டம் (Singapen Loan Scheme) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், சுயதொழில் தொடங்க விரும்பும் பெண்கள் கடன் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம்.  இந்த நிலையில் தான், சிங்கப்பெண் திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்ய விருப்பம் உள்ள பெண்கள் கடன் பெற வின்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவுத்து துறை அமைச்சர் காந்திராஜ் கூறியுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெண்கள் சுயதொழில் தொடங்க சிங்கப்பெண் திட்டத்தில் கடன்

பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு அட்டகாசமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அத்தகைய முக்கிய திட்டங்களில் ஒன்றுதான், தமிழக அரசு செயல்படுத்தும் சிங்கப்பெண் கடன் திட்டம். இந்த திட்டத்தை தமிழக கூட்டுறவுத்துறை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், தொழில் முனைவோர்கள், பணிபுரியும் மகளிர் ஆகியோர் கடன் உதவி பெறுவர்.

இதையும் படிங்க : சுங்கச்சாவடிகளில் செல்லும்போது வாகன பதிவு எண்ணை மறைத்தால் 5 மடங்கு அபராதம்!

ரூ.3,428.49 கோடி கடன்கள்

வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், கந்து வட்டி ஆகியவற்றில் கடன் பெற்று நிதி சுமையில் சிக்கிக்கொள்ளும் நிலை உள்ளது. எனவே தான், அரசு பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும், அவர்களை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக மிகவும் குறைந்த வட்டியில், மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

புதிய தொழில் மற்றும் தொழில் விரிவாக்கம்

இந்த திட்டத்தின் மூலம் புதியதாக தொழில் தொடங்க உள்ள பெண்களோ அல்லது ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவுப்படுத்த விரும்பும் பெண்களோ தங்களுக்கு அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை நேரில் அனுகி கடன் உதவி பெற்று பயன் அடையலாம்.

இதையும் படிங்க : Credit Card : கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்ட்ஸ் உண்மையாகவே பயனுள்ளதா?.. இதனை தெரிந்துக்கொள்ளுங்கள்!

நடப்பு ஆண்டில் இந்த மாதம் வரை சுமார் 41 ஆயிரத்து 369 பயனாளிகளுக்கு ரூ.3,428.49 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்கு பிறகோ அல்லது குழந்தை பிறந்த பிறகோ வேலைக்கு செல்ல முடியாத சூழலில் சிக்கிக்கொள்கின்றனர். இத்தகைய சூழலில் அவர்களுக்கு வீட்டில் இருந்தே செய்யக்கூடிய சிறுதொழில்கள் வருமானத்தை ஈட்ட சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us