AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சரிவில் தங்கம், வெள்ளி.. கடும் நஷ்டத்தில் ETF முதலீட்டாளர்கள்.. இதுதான் நிலவரம்!

Gold and Silver ETF Losses | 2026 ஆம் ஆண்டு தங்கம் மற்றும் வெள்ளி விலை கடும் உச்சத்தில் இருந்த நிலையில், பலரும் தங்கம் மற்றும் வெள்ளி ஈடிஎஃப்களில் முதலீடு செய்தனர். ஆனால், தற்போது தங்கம் மற்றும் வெள்ளி சரிவில் உள்ள நிலையில் ஈடிஎஃப் முதலீடுகள் நஷ்டத்தை சந்தித்துள்ளன.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Nov 2026 13:44 PM IST
காலம் காலமாக தங்க நகைகளில் முதலீடு செய்து வந்த இந்தியர்கள், சமீப காலமாம தங்கம் மற்றும் வெள்ளி ஈடிஎஃப்களில் (Gold and Silver ETF) மிகவும் ஆர்வத்துடன் முதலீடு செய்து வந்தனர். தங்க மற்றும் வெள்ளி ஆபரணங்களை வாங்கும்போது அவற்றுக்கு செய்கூலி, சேதாரம் செலுத்த வேண்டும் என்பதன் காரணமாக முழுமையான லாபத்தை பெறும் நோக்கில் பலரும் ஈடிஎஃப் (ETF - Exchange Traded Fund) முதலீடுகளில் குதித்தனர்.

1 / 5
இந்த நிலையில் தான், அவ்வாறு தங்கம் மற்றும் வெள்ளி ஈடிஎஃப்களில் முதலீடு செய்த நபர்கள் தற்போது கடும் நஷ்டத்தை எதிர்க்கொண்டுள்ளனர். அதாவது, 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தில் இருந்தபோது பெரும்பாலான மக்கள் தங்கம் மற்றும் வெள்ளி ஈடிஎஃப்களில் முதலீடு செய்தனர். ஆனால், தங்கம் மற்றும் வெள்ளி விலை தற்போது தலைகீழாக உள்ளது.

2 / 5
ஜனவரி மாத உச்சத்தை ஒப்பிட்டு பார்க்கையில் தங்க ஈடிஎஃப்கள் தற்போது 31 சதவீதம் சரிவையும், வெள்ளி ஈடிஎஃப்கள் 62 சதவீத சரிவையும் சந்தித்துள்ளன. இது தொடர்பான வெளியான வேல்யூ ரிசர்ச் அறிக்கையில், தங்கம் மற்றும் வெள்ளி அதன் உச்ச விலையில் இருக்கும்போது மேலும் விலை உயரும் என நினைத்து முதலீடு செய்தவர்கள் தான் தற்போது நஷடத்தை சந்தித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

3 / 5
அதுமட்டுமன்றி தங்கத்தை விடவும், வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் தான் அதிக நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நீண்ட கால அடிப்படையில் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டு வாய்ப்புகள் சிறப்பானதாக இருந்தாலும், எப்போது அவை மீண்டும் பவுன்ஸ் பேக் ஆகும் என்ற கேள்வி மிகவும் முக்கியமானதாக உள்ளது.

4 / 5
தங்கம் மற்றும் வெள்ளி இவ்வாறு கடும் சரிவை சந்திப்பது ஒன்று முதல் முறை கிடையாது. 1980 ஆம் ஆண்டு முதல்  இதுவரை சுமார் 11 முறை தங்கம் மற்றும் வெள்ளி சுமார் 25 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக நான்கு முறை 40 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Follow Us