AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முகங்களையோ உடல் நிறங்களையோ இது பார்க்காதே பார்க்காதே – 15 ஆண்டுகளை நிறைவு செய்தது எங்கேயும் காதல் படம்!

15 Years Of Engeyum Kadhal Movie: நடிகர் ரவி மோகன் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் எங்கேயும் காதல். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு கொண்டாடி வருகின்றது.

முகங்களையோ உடல் நிறங்களையோ இது பார்க்காதே பார்க்காதே – 15 ஆண்டுகளை நிறைவு செய்தது எங்கேயும் காதல் படம்!
எங்கேயும் காதல் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 May 2026 21:08 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 06-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் எங்கேயும் காதல். இந்தப் படத்தை இயக்குநர் பிரபு தேவா இயக்கி இருந்தார். மேலும் திரைக்கதையை ஏ.சி.முகில், ரவி  சக்கரவர்த்தி, ஜெயக்கண்ணன் மற்றும் பிரேம்சாய் ஆகியோர் இணைந்து எழுதி இருந்தனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சுமன், ராஜு சுந்தரம், மனோஜ் பஹ்வா, கோட்டைப்பாடி ஜே.ராஜேஷ், மரியன் அர்னாட், பிரகாஷ் ராஜ், பிரபு தேவா, உமா பத்மநாபன், ஐசரி கே. கணேஷ், ஜே. ராஜீவ் சௌத்ரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரித்து இருந்தனர். மேலும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

15 ஆண்டுகளை நிறைவு செய்தது எங்கேயும் காதல் படம்:

அதன்படி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் மிகப்பெரிய பணக்காரராக இருக்கிறார். இவருக்கு காதலில் நம்பிக்கை இல்லாமல் மிகவும் ஜாலியாக சுற்றித் திறிகிறார். இப்படி இருக்கும் நிலையில் அவரை துறத்தி துறத்தி காதலிக்கிறார் நடிகை ஹசிகா மோத்வானி.

அப்படி காதலிக்கும் பெண் மீது ரவி மோகனுக்கு காதல் வந்ததா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.

Also Read… தனுஷின் வாத்தி படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் இவரா? இவர் நடித்திருந்தால் மெகா ஹிட்டாகிறுக்குமே!

எங்கேயும் காதல் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சேயோன் பட நாயகியை உறுதி செய்த படக்குழு – வைரலாகும் எக்ஸ் தள பதிவு

Follow Us