AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

8 ஆண்டுகளை நிறைவு செய்தது ரஜினிகாந்தின் 2.o படம்… படக்குழு வெளியிட்ட பதிவு!

8 Years Of 2.0 Movie | நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் 2.0. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து படக்குழு தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

8 ஆண்டுகளை நிறைவு செய்தது ரஜினிகாந்தின் 2.o படம்… படக்குழு வெளியிட்ட பதிவு!
2.0Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Nov 2026 15:38 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரது நடிப்பில் சயின்ஸ் ஃபேண்டசி ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் வெளியான படம் 2.0. இந்தப் படம் முன்னதாக வெளியான எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது இந்தப் படம். எந்திரன் படத்தை இயக்கிய இயக்குநர் சங்கர் இந்த 2.0 படத்தையும் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக வெளியான எந்திரன் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அது போலவே அதன் தொடர்ச்சியாக வெளியான இந்த 2.0 படமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் அக்ஷய் குமார், எமி ஜாக்சன், அடில் உசேன், சுதன்ஷு பாண்டே, கலாபவன் ஷாஜோன், மயில்சாமி, ஐசரி கே. கணேஷ், கைசாத் கோட்வால், அனந்த் மகாதேவன், மைக்கேல் முத்து மற்றும் அவிஜித் தத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

8 ஆண்டுகளை நிறைவு செய்தது ரஜினிகாந்தின் 2.o படம்:

இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த விஞ்ஞானியாக இருக்கிறார். அதே சமையம் இயற்கை மீது பறவைகள் மீது தீராக் காதல் கொண்ட அக்ஷய் குமார் செல்போன் கதிர்களால் பறவைகள் உயிரிழப்பதை கண்டு கோபம் அடைகிறார். இதனால் அவர் செல்போன்களை பயன்படுத்துபவர்கள் மீது கோபமடைந்து அவர்களை காயப்படுத்தும் விதமாக நடந்துகொள்கிறார். இதில் இருந்து மக்களை ரஜினிகாந்தும் அவர் உருவாக்கிய ரோபோக்களும் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக படக்குழு தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… அஜித்தின் ரசிகர்களுக்காக மாஸ் காட்சி.. டேர் டெவில் படத்தில் சர்ப்ரைஸான சம்பவம் செய்த இயக்குநர்!

2.0 படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… ஓடிடியில் வெளியாகி உள்ள டோன்ட் ட்ரபிள் தி ட்ரபுள் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

Follow Us