பேக் டூ பேக்.. போட்டியாளர்களை தனி தனியாக அழைத்து அட்வைஸ் சொன்ன விஜய் சேதுபதி – ப்ரோமோ இதோ!
Bigg Boss 10 Tamil: விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சிறப்பாக ஒளிரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருகிறது. இன்று (29/11/2026) போட்டியாளர்களை சந்தித்த விஜய் சேதுபத்தில், அவர்களுக்கு தனி தனியாக அட்வைஸ் சொன்னது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழில் மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பை பெற்றுவரும் ரியாலிட்டி ஷோவாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியை தமிழ் நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் நிலையில், 12வது வாரத்தின் இறுதியில் உள்ளது. இந்த வாரத்தில் எந்த ஓபன் நாமினேஷனும் நடைபெறாத நிலையில், இந்த வாராதில் எவிக்ஷன் இல்லையென்று கூறப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி இன்றுடன் (29/11/2026) 84 நாட்களை கடந்துள்ளது. இந்த வாரமானது முழுக்க பேமிலி வீக்காக அமைந்த நிலையில், பெரிதாக சண்டைகள் எதுவும் நடக்கவில்லை.
மேலும் இந்த வாரத்தில் எவிக்ஷனும் இல்லையென்ற நிலையில், ரசிகர்கள் மத்தியில் அடுத்த வாரத்தில் யார் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று வெளியான 3வது ப்ரோமோவில் நடிகர் விஜய் சேதுபதி, பிக் பாஸ் போட்டியாளர்களை தனி தனியாக அழைத்து அவர்களுக்கு இப்போட்டி குறித்து அட்வைஸ் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 8 ஆண்டுகளை நிறைவு செய்தது ரஜினிகாந்தின் 2.o படம்… படக்குழு வெளியிட்ட பதிவு!




போட்டியாளர்களை தனி தனியாக அழைத்து அட்வைஸ் சொன்ன விஜய் சேதுபதி:
இந்த ப்ரோமோவில் பேசிய விஜய் சேதுபதி, முதலில் லக்ஷ்மி பிரியாவிடம் பேசுகிறார். அதில், “தன்னிடம் எந்த கேள்விகளாக இருந்தாலும் கேளுங்கள்” என விஜய் சேதுபதியிடம் அவர் கூறியிருந்தார். உடனே லக்ஷ்மி பிரியா, “சார் என்னிடம் எதாவது மாற்றவேண்டுமா?” என கேட்டிருந்தார். அதற்கு பேசிய விஜய் சேதுபதி, நீங்கள் எமோஷனல் ஆளாலோ.. அல்லது கோபப்பட்ட உங்களின் எல்லையை மீறி போகிறீர்கள் என சொன்னார். அதன் பிறகு வினோத் பாபுவிடம் பேசிய விஜய் சேதுபதி, “கொஞ்சம் முண்டி பேசினால் போதும், தவறை தாம்பூல தட்டில்வைத்து வினோத் பாபு கொடுத்துவிடுவார் என சொன்னார்.
இதையும் படிங்க: விஜய் ஆண்டனியின் அடுத்தப் படத்தின் கதை எப்படி இருக்கும் தெரியுமா? வைரலாகும் தகவல்
அதன் பிறகு தன்யா குறித்து பேசிய அவர், தன்யாவின் வண்டி ஒரு இடத்திலிருந்து டேக்ஆஃப் ஆச்சி.. ஆனால் அந்த இடத்திலிருந்து நகர்ந்த மாதிரி இல்ல. இந்த இடத்திலிருந்து பீக்குக்கு போக எல்லாம் சரியாகும் என கூறினார். அன்சார் குறித்து பேசிய விஜய் சேதுபதி, “எனக்கு கம்ஃபர்டபுலாக இருந்தால் அந்த இடத்தில சிறப்பாக விளையாடுவேன் இல்லையென்றால், இல்லையென்றால் பின்னாடி போயிடுவேன் என்பதை தள்ளி வைங்க..” மேலும் ப்ரிருத்வி குறித்து பேசிய விஜய் சேதுபதி, முதல் இடத்திற்கு போட்டியிடுவார் வேறுயாரோ, நான் 2 – 3 வது இடத்திற்குதான் போட்டியிருக்கிறேன் என்பது போல இருக்கிறீர்கள் என சொன்னார். அதன் பிறகு, முனியம்மாள், டிடிஃஎப் வாசன் மற்றும் ஜேசன் குறித்தும் இதில் பேசியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 84வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த பதிவு:
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது 84வது இடத்தில் உள்ள நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இன்னும் சில நாட்களுக்குள் இந்த நிகழ்ச்சியானது முழுமையாக நிறைவடைந்துவிடும் என்ற நிலையில், வரும் வாரத்தில் டபுள் எவிக்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.