AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சல்யூட் அடிக்கும் துருவ் ஜூரல் – தந்தையின் உருக்கமான கார்கில் போர் பின்ணனி

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரல், ஒவ்வொரு முறை முக்கியமான மைல்கல்லை எட்டும்போதும் தனது தந்தையை நோக்கி சல்யூட் அடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதற்கு பின்னால் ஒரு ராணுவ வீரரின் கார்கில் போரின் நினைவுகள் அடங்கியுள்ளன.

சல்யூட் அடிக்கும் துருவ் ஜூரல் – தந்தையின் உருக்கமான கார்கில் போர் பின்ணனி
துருவ் ஜூரல்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 29 Nov 2026 16:06 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரல், ஒவ்வொரு முறை முக்கியமான மைல்கல்லை எட்டும்போதும் தனது தந்தையை நோக்கி சல்யூட் அடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மைதானத்தில் அவர் வெளிப்படுத்தும் இந்தச் செய்கை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆனால், அந்தச் சல்யூட்டுக்குப் பின்னால் ஒரு ராணுவ வீரரின் தியாகமும், கார்கில் போரின் நினைவுகளும், தந்தை மீதான மகனின் அன்பும் அடங்கியுள்ளன.

துருவ் ஜூரலின் தந்தை நேம் சந்த் ஜூரல், இந்திய ராணுவத்தில் 8வது ஜாட் படைப்பிரிவில் பணியாற்றியவர். 1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் அவர் பங்கேற்றார். போர் தொடங்குவதற்கு முன்பு, தனது குடும்பத்தின் எதிர்காலம் குறித்த கவலையுடன் அவர் எழுதிய கடிதம் இன்றளவும் அந்தக் குடும்பத்தின் நினைவில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது.

துருவ் ஜூரல் தந்தையின் கார்கில் போர் பின்னணி

கடந்த 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் தொடங்குவதற்கு முன்பு, நேம் சந்த் தனது மனைவிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். போருக்கு செல்லும் ஒரு ராணுவ வீரர், தனக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் தனது குடும்பம் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படக் கூடாது என்ற கவலை அந்த கடிதத்தில் வெளிப்பட்டது. மேலும் அந்தக் கடிதத்தில் தனது சேமிப்புத் தொகை, வங்கியில் வைத்திருந்த ஃபிக்சட் டெபாசிட் உள்ளிட்ட விவரங்களை அவர் குறிப்பிட்டிருந்தார். ஒருவேளை தான் போரில் இருந்து திரும்பி வர முடியாத சூழல் ஏற்பட்டால், அந்தப் பணத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் மனைவிக்கு விளக்கியிருந்தார்.

இதையும் படிக்க : U19 Women’s Asia Cup: U19 மகளிர் ஆசியக்கோப்பை.. வலுவான இந்திய மகளிர் அணியை களமிறக்கிய பிசிசிஐ!

இதுகுறித்து நினைவுகூர்ந்த நேம் சந்த், “போர் தொடங்கியபோது எனது மனைவிக்கு ஒரு கடிதம் எழுதினேன். என்னுடைய சேமிப்புகள் மற்றும் நிலையான வைப்புத் தொகைகள் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டேன். எனக்கு ஏதாவது நேர்ந்தால் அந்தப் பணத்தை எப்படி பெற வேண்டும் என்பதையும் தெரிவித்தேன். மேலும் பணத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினேன் எனத் தெரிவித்துள்ளார். ஒரு ராணுவ வீரராக நாட்டின் பாதுகாப்புக்காக போருக்குச் சென்றாலும், தனது குடும்பத்தின் எதிர்காலம் குறித்த அக்கறையை அவர் மறக்கவில்லை என்பதையே இந்தச் சம்பவம் வெளிப்படுத்துகிறது.

தந்தையின் ராணுவப் பயணம்… மகனின் கிரிக்கெட் பயணம்!

தற்போது நேம் சந்த் தனது மகன் துருவ் ஜூரல் இந்திய அணிக்காக விளையாடுவதை பார்த்து பெருமிதம் கொள்கிறார். முன்பு நாட்டின் எல்லையில் நின்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட அவர், இன்று கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மகனின் ஆட்டத்தை ரசித்து வருகிறார். துருவ் கிரிக்கெட்டை இலக்காகத் தேர்வு செய்தபோது, அவரது தந்தை முழு ஆதரவையும் அளித்துள்ளார். கிரிக்கெட்டுக்குத் தேவையான பேட், ஷூ உள்ளிட்ட உபகரணங்களை வாங்கித் தருவதில் ஒருபோதும் சமரசம் செய்துகொண்டதில்லை என நேம் சந்த் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : IND vs NZ: கிறிஸ்ட்சர்ச்சில் ஃபாலோ-ஆனை தவிர்க்குமா இந்தியா..? இன்னும் எத்தனை ரன்கள் தேவை..?

துருவ் ஜூரல் ஒவ்வொரு முறையும் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டிய பிறகு தனது தந்தையை நோக்கிச் சல்யூட் அடிப்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல. நாட்டுக்காகப் போரிட்ட ஒரு ராணுவ வீரரின் தியாகத்தையும், தனது கிரிக்கெட் பயணத்தில் உறுதுணையாக இருந்த தந்தையின் அர்ப்பணிப்பையும் நினைவுகூரும் ஒரு உணர்வுப்பூர்வமான மரியாதையாக அது அமைந்துள்ளது.

Follow Us