AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IPL 2027: கேகேஆர் கேப்டன் ரிங்கு சிங்? பரிந்துரை செய்த இர்பான் பதான்!

KKR Captain IPL 2027: ஐபிஎல் 2027 தொடருக்கான கேப்டனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தேடி வருகிறது. அஜிங்க்ய ரஹானே ஓய்வால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப, முன்னாள் வீரர் இர்பான் பதான் ரிங்கு சிங்கை கேப்டனாக பரிந்துரைத்துள்ளார். கேகேஆர் அணியில் தற்போது தலைமைக்கு சிறந்த வீரர்கள் இல்லாததால், ரிங்கு சிங்கே சரியான தேர்வு என பதான் தனது கருத்தை ஆணித்தரமாக முன்வைத்துள்ளார்.

IPL 2027: கேகேஆர் கேப்டன் ரிங்கு சிங்? பரிந்துரை செய்த இர்பான் பதான்!
ரிங்கு சிங்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Nov 2026 09:00 AM IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஐபிஎல் 2027 (IPL 2027) தொடருக்காக கேப்டனைத் தேடி வருகிறது. கடந்த ஐபிஎல் 2026 சீசனில், அஜிங்க்யா ரஹானே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை (Kolkata Knight Riders) வழிநடத்தினார். இருப்பினும், அவரது ஓய்வு, அந்த அணியின் கேப்டன் பதவி குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கிடையில், இந்தியாவின் நட்சத்திர இடது கை பேட்ஸ்மேனான ரிங்கு சிங்கை கேகேஆர் அணியின் கேப்டனாக நியமிக்கலாம் என்று முன்னாள் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் பரிந்துரைத்ததுடன், தான் ஏன் ரிங்கு சிங்கை கேப்டனாகப் பரிந்துரைத்தேன் என்பதையும்  விளக்கினார்.

ALSO READ: மீண்டும் கேப்டன் ஆனது ஏன்..? தருணத்தை நினைவு கூர்ந்த ரோஹித் சர்மா!

கேப்டனாக ரிங்கு சிங் ஏன்..?

ஜியோஸ்டாருக்கு அளித்த பேட்டியில் இர்பான் பதான் கூறியதாவது, “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ரிங்கு சிங்கை நியமிப்பது குறித்து நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது, ​​அவர்களின் அணியில் கேப்டன் பதவிக்கு அதிக தேர்வுகள் இல்லை. இத்தகைய சூழ்நிலையில், ரிங்கு சிறந்த தேர்வாகத் தெரிகிறார். ஏலத்தில் இருந்து ஒரு கேப்டனை வாங்குவது குறித்தும் அவர்கள் பரிசீலிக்கலாம். அப்படி நடந்தால், என் நினைவுக்கு வரும் ஒரே வீரர் ஷாய் ஹோப். அவர் சமீபத்தில் இந்தியாவில் ஒரு தொடரில் விளையாடி மிகவும் சிறப்பாகச் செயல்பட்டார். அவர்கள் விரும்பினால் இந்த வாய்ப்பை பரிசீலிக்கலாம். ஆனால் அணி நிர்வாகம் செயல்படும் விதத்தைக் கருத்தில் கொண்டால், ரிங்கு சிங்தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் புதிய கேப்டனாக வருவார் என்று நான் நினைக்கிறேன்.”என்றார்.

ALSO READ: KKR-ன் மாஸ்டர் பிளான்.. கொல்கத்தாவில் சிறப்பு சோதனை போட்டி.. உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு?

தொடர்ந்து பேசிய இர்பான் பதான், “ கேகேஆர் விடுவித்துள்ள வீரர்கள் ஆச்சரியப்படுவதற்கில்லை. அஜிங்க்யா ரஹானே வெளியேறிய நிலையில், அணி விரும்பினால் அங்ககிரிஷ் ரகுவன்ஷிக்கு தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்க வாய்ப்பு கிடைக்கலாம். இதன் மூலம், பல விஷயங்கள் அவர்களுக்குச் சாதகமாக அமையக்கூடும். கடந்த ஐபிஎல் 2026 சீசனில் கேகேஆர் அணியில் இடம்பெறாத ஹர்ஷித் ராணா, தற்போது பந்துவீச முழுத் தகுதியுடன் இருக்கிறார். இது அணியை மேலும் வலுப்படுத்தும். எனவே, கொல்கத்தாவிடம் ஒரு நல்ல தலைவர் இருந்தால், அவர்களின் வரவிருக்கும் சீசன் கடந்த சீசனை விட மிகவும் சிறப்பாக அமையக்கூடும்.” என்று தெரிவித்தார்.

Follow Us