AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகத்தில் புதிய நண்பர் இருக்கிறார்.. அவரை பார்க்க ராகுல் காந்தி வந்திருப்பார்.. உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!

Udhayanidhi Criticizes Congress Members Visit : தமிழகத்தில் புதிய நண்பர் இருக்கார்ல அவரை பார்ப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அந்தக் கட்சியினர் வந்திருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் உதய நிதி ஸ்டாலின் விமர்சனத்தை முன் வைத்துள்ளார் .

தமிழகத்தில் புதிய நண்பர் இருக்கிறார்.. அவரை பார்க்க ராகுல் காந்தி வந்திருப்பார்.. உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
உதயநிதி ஸ்டாலின்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 29 Nov 2026 15:44 PM IST

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் உள்ள நீச்சல் குளம் அருகே சென்னை மாநகராட்சி மற்றும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 1.50 கோடியில் கட்டப்பட்ட சிறுவர்கள் விளையாட்டு திடல், திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, காங்கிரசாரின் தமிழக வருகை குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: புதிய நண்பர் ( ஜோசப் விஜய்) ஒருத்தர் இருக்கிறார். அவரைப் பார்ப்பதற்காக காங்கிரஸார் வருகிறார்கள் என்று நினைக்கிறேன். இன்று ஞாயிற்றுக்கிழமை என்று தெரிவித்தார். அப்போது, திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை, காங்கிரஸ் கட்சியினர் சந்திக்க வருவதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர். அதற்கு அப்படியா, வரட்டும், வந்து பார்க்கட்டும் என்று தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறையில் திமுவின் நிலைப்பாடு

மேலும், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு என்ற நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளதா இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது தொடர்பாக மு .க. ஸ்டாலின் தான் முடிவெடுப்பார். தொகுதி மறுவரையறை பற்றி ஏற்கனவே ஆ. ராசா, தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் தெளிவாக கூறியுள்ளனர். தமிழ்நாட்டு உரிமைகளை விட்டுக் கொடுக்கும் வகையில் எந்த முடிவையும் திமுக தலைவர் எடுக்க மாட்டார். சரியான நேரத்தில், சரியான முடிவை எடுப்பார். இந்தியாவில் தொகுதி மறுவரை தொடர்பாக முதன் முதலில் திமுக இயக்கம் தான் பேசியது.

மேலும் படிக்க: கடலூர் சிறையில் தவெக எம்எல்ஏ.. உயர் பாதுகாப்பு அறையில் அடைப்பு.. என்னென்ன நடைமுறைகள்!

திமுகவிடம் சொல்லாமல் தவெகவு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ்

எனவே, எந்த வகையிலும் தமிழகத்தின் உரிமைகளை திமுக விட்டுக்கொடுக்காது. திருப்பரங்குன்றம் மற்றும் தொகுதி மறுவரையறை உள்ளிட்டவை தொடர்பாக முதல்வர் என்றைக்கு தான் பேசியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. இந்த நிலையில், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என தமிழக வெற்றிக் கழகம் கூறியதை அடுத்து தேர்தலுக்கு பின்னர், திமுகவிடம் சொல்லிக்கொள்ளாமல் காங்கிரஸ் கட்சி வெளியேறி தவெகவுடன் கூட்டணி அமைத்தது. இதனால், அந்தக் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் கிடைத்தன.

தவெகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் கூடுதல் தொகுதிகளில் வெற்றி

தமிழக வெற்றிக் கழகத்தில் காங்கிரஸ் இணைந்தது முதலே திமுகவை காங்கிரஸ் நிர்வாகிகள் விமர்சித்து வருகின்றனர். திமுக கூட்டணியில் இருந்ததால் ஆட்சிக்கு எதிரான மனநிலை காங்கிரஸ் கட்சியை பாதித்துவிட்டது. இதனால், 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சட்டசபை தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் காங்கிரஸ் இன்னும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் இன்று பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.

மேலும் படிக்க: சினிமா பாணியில் சம்பவம்! கண்டெய்னர் லாரியை திறந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்.. திருவள்ளூர் போலீசார் விசாரணை!

Follow Us