AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கடலூர் சிறையில் தவெக எம்எல்ஏ.. உயர் பாதுகாப்பு அறையில் அடைப்பு.. என்னென்ன நடைமுறைகள்!

TVK MLA Lodged High Security Cell : கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு உயர் பாதுகாப்பு அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கடலூர் சிறையில் தவெக எம்எல்ஏ.. உயர் பாதுகாப்பு அறையில் அடைப்பு.. என்னென்ன நடைமுறைகள்!
சிறையில் அடைக்கப்பட்ட தவெக எம்எல்ஏ.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 29 Nov 2026 14:31 PM IST

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக கைது செய்யப்பட்ட தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கடலூர் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளார். தவெக எம்எல்ஏ மீது கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஐஜி காமினி மேற்பார்வையில், திருப்பூர் எஸ். பி. சிருஷ்டி சிங்க் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை அவரது வீட்டிலிருந்து போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் கடலூர் மத்திய சிறையில் உள்ள உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தவெக எம்எல்ஏவுக்கு சிறையில் உயர் பாதுகாப்பு அறை

அவருக்கு சிறையில் உயர் பாதுகாப்பு அறை வழங்கப்பட்டிருந்தாலும், அதில், சொகுசு வசதிகள் எதுவும் இருக்காது என்று சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு அறை என்பது தப்பி செல்லும் அபாயம் உள்ள கைதிகள் மற்றும் பிற கைதிகளால் உயிருக்கு ஆபத்து உள்ள கைதிகள், பாதுகாப்பு அடிப்படையில் கூடுதல் கண்காணிப்பு தேவைப்படும் கைதிகள் ஆகியோர் சிறைச்சாலை வளாகத்தில் உள்ள உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்படுவார்கள். பொதுவாக, சிறையின் மற்ற பகுதிகளில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் தலா 10 கைதிகள் அடைக்கப்பட்டிருப்பர்.

மேலும் படிக்க: தொகுதி மறுசீரமைப்பு மசோதா.. “முடிவில் மாற்றமில்லை.. எட்டப்பன் அல்ல கட்டபொம்மன்”.. ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!!

சிறையில் உயர் பாதுகாப்பு அறை என்றால் என்ன

ஆனால், உயர் பாதுகாப்பு பகுதியில் தனித்தனி சிறை அறைகள், கழிவறைகள், குளியலறை வசதிகள் உள்ளிட்டவை இருக்கும். அத்துடன், உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உணவு, மருத்துவ வசதிகளை பொறுத்தவரை மற்ற கைதிகளுக்கு வழங்கப்படுவது போல அவர்களுக்கும் வழங்கப்படும். அத்துடன், உயர் பாதுகாப்பு அறை பகுதியில் கூடுதல் சிறை காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பர். குறிப்பாக, இங்கு அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை மற்ற பகுதிகளில் இருந்து வரும் கைதிகளை பார்க்கவோ அல்லது இங்கு அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் பிற பகுதியில் உள்ள கைதிகளை பார்க்கவோ அனுமதி கிடையாது.

உயர் பாதுகாப்பு அறையின் அவசியம் என்ன

கைதிகளின் பாதுகாப்பு மற்றும் சிறையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இத்தகைய சிறப்பு பாதுகாப்பு பகுதி இருப்பதாக சிறைத்துறை மற்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் போது, அவர்களுக்கு சிறையில் முதல் வகுப்பு மற்றும் பல்வேறு சொகுசு வசதிகள் வழங்கப்படும். இதில், தற்போது கைதான எம்எல்ஏவுக்கு உயர் பாதுகாப்பு அறை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: “துரோகம் செய்த ராகுலுக்குப் பதிலடி!”.. சென்னைக்கு வரவேண்டாம்.. மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக களமிறங்கிய பாஜக தலைவர்..

Follow Us