Tamil Nadu Weather forecast: அடுத்த 2 நாட்கள் எங்கெல்லாம் மழை பெய்யும்? வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை
Tamil Nadu Weather Alert: தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கீழ் அடுக்குகளில் வடகிழக்கு பருவக் காற்று வீசுகிறது. இதன் காரணமாக வருகிற டிசம்பர் 5, 2026 வரை தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, நவம்பர் 29 : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கீழ் அடுக்குகளில் வடகிழக்கு பருவக் காற்று வீசுகிறது. இதன் காரணமாக வருகிற டிசம்பர் 5, 2026 வரை தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு (Rain Alert) வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் டிசம்பர் 4, 2026 மற்றும் டிசம்பர் 5, 2026 ஆகிய 2 நாட்கள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
வடகிழக்கு பருவக் காற்று காரணமாக நவம்பர் 29, 2026 நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலு் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவிததுள்ளது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 30, 2026 நாளை வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிக்க : தொகுதி மறுசீரமைப்பு மசோதா.. “முடிவில் மாற்றமில்லை.. எட்டப்பன் அல்ல கட்டபொம்மன்”.. ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!!




மேலும் வருகிற டிசம்பர் 1, 2026 அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 4, 5 ஆகிய 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
இந்த நிலையில் டிசம்பர் 4, 2026 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்து. மேலும் கடலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் எசசரித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து டிசம்பர் 05, 2026 அன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தொகுதி மறுவரையறை மசோதா.. ’முடிவை மாற்றிக் கொள்ளும் திமுக?’.. அவசரமாக சென்னை திரும்பும் கனிமொழி!
சென்னை வானிலை நிலவரம்
சென்னையைப் பொறுத்தவரை நவம்பர் 29, 2026 இன்றும் நவம்பர் 30, 2026 நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.