AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அப்படி நடக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை – அர்ச்சனா ரவிசந்த்ரன் ஓபன் டாக்

Archana Ravichandran talks about Bigg Boss winning | சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது வெள்ளித்திரையில் நாயகியாக நடித்து வருபவர் அர்ச்சனா ரவிச்சந்த்ரன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அப்படி நடக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை – அர்ச்சனா ரவிசந்த்ரன் ஓபன் டாக்
அர்ச்சனா ரவிசந்த்ரன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Nov 2026 14:52 PM IST

தமிழ் சின்னத்திரையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீரியல்களில் நடித்ததன் மூலம் தமிழக மக்களிடையே கவனத்தை ஈர்த்தவர் நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன். இவர் சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து சின்னத்திரையில் அடுத்தடுத்து சீரியல்களில் நடித்து வந்த நடிகை அர்ச்சனா தமிழக மக்களிடையே அதிக அளவில் பிரபலம் ஆனது என்னவோ பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு தான். அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்கார்ட் போட்டியாளராக போட்டியிட்ட நடிகை அர்ச்சனா மக்களின் ஆதரவைப் பெற்று அந்த சீசனில் வெற்றியாளராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்தான் வைல்கார்ட் போட்டியாளராக வந்து வெற்றியை பிக்பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சியில் பதிவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான பிறகு வெள்ளித்திரையில் படங்களின் வாய்ப்பு அதிகரித்து வருகிறது.

அதன்படி டிமாண்டி காலனி 2 படத்தின் மூலம் வெள்ளித்திரையில் படத்தில் நடித்த நடிகை அர்ச்சனா அதனைத் தொடர்ந்து லெனின் பாண்டியன் மற்றும் ஆக்டோபஸ் ஆகியப் படங்களில் நடித்துள்ளார். இதில் இறுதியாக வெளியான ஆக்டோபஸ் படத்தில் நடிகை அர்ச்சனா நாயகியாக நடித்து உள்ளார். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அப்படி நடக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை:

அதன்படி நடிகை அர்ச்சனா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வெற்றி அடைவீர்கள் என்று நினைத்தீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய நடிகை அர்ச்சனா, இல்லை, அந்தச் சமயத்தில் நான் சுழல் சீசன் 2-க்கான ஆடிஷனுக்குச் சென்றிருந்தேன். கௌரி நடித்த கதாபாத்திரத்திற்காக நான் ஆடிஷன் கொடுத்தேன். அன்று காலை, அந்த வெப் தொடருக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். நவம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழுவினர் என்னிடம் தெரிவித்தனர்.

சுழல் குழுவினரிடம், நவம்பர் பாதியிலேயே நான் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிடுவேன், அதனால் என்னால் இந்தத் தொடரில் நடிக்க முடியும் என்று கூறினேன். ஆனால், நான் வெளியே வருவேனா இல்லையா என்பது உறுதியாகத் தெரியாததால், அவர்களால் எந்த வாக்குறுதியும் அளிக்க முடியாது என்று கூறிவிட்டனர். இருப்பினும், நான் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிடுவேன் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

Also Read… பிக்பாஸில் யார் வீட்டார் உள்ளே வரும்போது பயந்தீர்கள்… போட்டியாளர்கள் ஓபன் டாக்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Mysskin: ஒரு பெண்ணின் தனிமை.. பிசாசு 2 திரைப்படம் எப்படி இருக்கும் என தெரிவித்த மிஷ்கின்!

Follow Us